Christiyano Ronaldo 4 Goals: கால்பந்து லீக் அணிகளுக்காக விளையாடிய ஆட்டங்களில் 500 Goal-களை கடந்து சாதனை புரிந்தார் ரொனால்டோ! சவூதி ப்ரோ லீக் போட்டியில் அல் நாசர் மற்றும் அல் வெஹ்தா இடையிலான போட்டியில்  கிறிஸ்டியானோ ரொனால்டோ 4 கோல்களை அடித்துத் தனது அணியை வெற்றி பெறச் செய்து, தன் மீதான விமர்சனங்களை துடைத்தெறிந்து, என்றென்றும் கால்பந்து நாயகன் நான் என்று நிரூபித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒற்றை ஆளாக அணியை வெற்றி பெற வைத்த ரொனால்டோ, தனது இடதுகால் ஷாட் மூலம் முதல் கோல் அடித்தார். ரொனால்டோ அடித்த முதல் கோலே அவருக்கு ஒரு மைல்கல் சாதனையாக பதிவு செய்யப்பட்டது. கிளப் ஆட்டத்தில் அவர் அடித்த கோல்களின் எண்ணிக்கை 500 என்ற தொட்டது.


 சக வீரர் அனுப்பிய பந்தை காற்றிலேயே அடித்து இரண்டாவது கோல் அடித்தார் ரொனால்டோ.  மூன்றாவது கோலையும் அவரே அடித்ததன் மூலம், ஹாட்ரிக் சதனையை படைத்தார். கடந்த போட்டிக்கு முன்பு வரை மிக அதிக தொகைக்கு ரொனால்டோவை வாங்கியது தொடர்பான விமர்சனங்களை எதிர்கொண்டு வந்த ரொனால்டோ, தனது அணிக்காக ஹாட்ரிக் அடித்த கையோடு, நான்காவது கோலையும் அடித்தார்.


ஒரு வாரத்திற்கு முன்னதாக,  அல் ஃபாதேவுக்கு எதிராக விளையாடியபோது அல் நாசர் அணியின் வீரர் ரொனால்டோ தனது முதல் கோலை சௌதி அரேபிய கிளப் ஆட்டத்தில் அடித்தார்.


மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து விலகி, அல் நாசர் அணிக்கு வந்தபிறகு, சௌதி ப்ரோ லீக்கில் ரொனால்டோ அடித்த முதல் கோல் அது. அதைத் தொடர்ந்து தற்போது ஹாட்ரிக் கோலுடன் தடம் பதித்த ரொனால்டொவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


மேலும் படிக்க | Video: இந்திய வீரர் அடித்த ஒரே அறை... அதிர்ந்த தினேஷ் கார்த்திக்


கிறிஸ்டியானோ ரொனால்டோ இதுவரை, ரியல் மாட்ரிட் அணிக்காக 44 ஹாட்ரிட் கோல்களை அடித்துள்ளார். அதுபோக, மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 3 ஹாட்ரிக் கோல்கள், யுவென்டஸ் அணிக்காக 3 ஹாட்ரிக் கோல்கள், போர்ச்சுகல் தேசிய அணிக்காக 10 ஹாட்ரிக் கோல்கள் அடித்துள்ளார். தற்போது அல்-நாசர் அணிக்காக ஹாட்ரிக் கோல்களை அடித்து, தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார் ரொனால்டோ.


ரொனால்டோ, அல் நாசரை வலுவான அணியாக மாற்றியுள்ளதாக கடந்த வாரம் தெரிவித்த அல் நாசர் அணியின் பயிற்சியாளர் லூயிஸ் கஸ்டாவோ, அவரின் இருப்பே, பிற கிளப்புகள் தங்கள்ளை குறி வைப்பதற்கான காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.  


அல் ஃபதேவுக்கு எதிராக 2-2 என்று டிரா செய்த ஆட்டத்தில் தனது கோல் கணக்கைத் தொடங்கி, தற்போது 4 கோல்களை அடித்து அல் வெஹ்தாவுக்கு எதிராக அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்ற ரொனால்டோவுக்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


முந்தைய ஆட்டத்தில் பெனால்டி ஷாட் மூலம், தன் மீதான விமர்சனங்களுக்கு, தனது கால்பந்தால் பதில் கொடுக்கத் தொடங்கிய கிறிஸ்டியானோ ரொனாட்வோன் சாதனை, அனைவரின் வாயையும் கட்டிப்போட்டுவிட்டது. 


மேலும் படிக்க | Earthquake: நிலநடுக்கத்தின் கோரத்தண்டவத்தின் எதிரொலி! 21000த்தை தாண்டிய பலி எண்ணிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ