எந்தவொரு துறையிலும் ஜாம்பவான்கள் தங்கள் வேலையை பார்த்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு கொம்பு சீவி விடுவதற்கு என்று பட்டாளம் ஒன்றும் இருக்கும். ரசிகர்களும் இருப்பார்கள். ஆனால், இரு ஜாம்பவான்களில் யார் பெரியவர் என்ற விவாதத்தை மற்றொரு பிரபலமே ஏன் தொடங்குகிறார்?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ லியோனல் மெஸ்ஸி இருவரில் யார் சிறந்தவர் என்று சொல்லி GOAT Debate என்ற விவாதத்தை மீண்டும் துவக்கி வைத்திருப்பது யார் தெரியுமா?


மிக பிரபலமான பத்திரிகையாளர் Piers Morgan. ஞாயிற்றுக்கிழமை இரவு, ஜுவென்டஸ் நட்சத்திரம்  ரொனால்டோ சீரியா ஏ சீசனின் கோல் அடித்த பிறகு, அவர் தான் இந்த சகாப்தத்தின் ஆகச் சிறந்த கால்பந்து வீரர் என்று  Piers தனது டிவிட்டரில் பதிவிட்ட பிறகு, பின்னர் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ யார் பெரியவர் என்ற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.


Also Read | Bizarre BCCI: இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு T20 World Cup பரிசுத் தொகை வழங்கப்படவில்லை


லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் இந்த விளையாட்டை விளையாடிய சிறந்த கால்பந்து வீரர்கள். இரண்டு  சூப்பர் ஸ்டார்களுக்கும் சர்வதேச அளவில் ரசிகர்கள் உண்டு. இருவரில் யார் சிறந்தவர் என்ற கேள்வி எப்போதும் எழுவதுண்டு.


மெஸ்ஸி ஒரு விருதை வென்றால் அல்லது கோல் அடித்தால், அவரது ரசிகர்களுக்குக் கொண்டாட்டம். சும்மா இருக்காமல் ரொனால்டோ ரசிகர்களை சீண்டுவார்கள். அதேபோல, ரொனால்டோவின் வெற்றிக்கு அவரது ரசிகர்கள் மெஸ்ஸியின் ரசிகர்களை வெறுப்பேற்றுவார்கள்.


மோர்கன் இவ்வாறு ட்வீட் செய்துள்ளார்: "மெஸ்ஸி ஒரு மேதை, ஆனால் அவர் ரொனால்டோ போல் வெவ்வேறு லீக்குகளில் விளையாடி ஒருபோதும் சவால்களை எதிர்கொள்ளவில்லை."



இப்போது மீண்டும் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ விவாதம் எழுந்துள்ளது.  


Also Read | La Liga சாம்பியன் பட்டத்தை வென்றது அட்லெடிகோ மாட்ரிட்


36 வயதான போர்த்துகீசிய ஸ்ட்ரைக்கர் 2020-21 சீசனில் அதிக கோல் அடித்தார். பிரீமியர் லீக், லா லிகா மற்றும் இத்தாலியின் உயர்நிலை விளையாட்டுகளில் இந்த சாதனையை நிகழ்த்திய ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றார். மெஸ்ஸி (Messi) தனது வாழ்நாள் முழுவதும் பார்சிலோனா கிளப்புக்காக மட்டுமே விளையாடியதால், அவர் இந்த சாதனையை செய்ய வாய்ப்பில்லை


பிரபல நட்சத்திர பத்திரிகையாளர் பியர்ஸ் மோர்கன், இரண்டு நட்சத்திரங்களையும் அறிந்தவர். அவர் தனது டிவிட்டரில் இட்ட பதிவு தான் தற்போது மெஸ்ஸியா? ரொனால்டாவா என்ற விவாதத்தை மீண்டும் ஒருமுறை எழுப்பியிருக்கிறது.


மெஸ்ஸியை ஒரு மேதை என்று பாராட்டிய மோர்கன், ரொனால்டோ எந்த காலத்திலும் சிறந்த ஆட்டக்காரர் (greatest in all-time) என்று கூறினார், ஏனெனில் அவர் பார்சிலோனா கேப்டனைப் போலல்லாமல் மூன்று லீக்குகளில் சிறப்பாக செயல்பட்டார்.


Also Read | One rupee Coin value 1 lakh: ஒற்றை ரூபாய் நாணயத்தை கொடுத்து லட்ச ரூபாய் பெறலாம்


மோர்கன் இவ்வாறு ட்வீட் செய்துள்ளார்: "மெஸ்ஸி ஒரு மேதை, ஆனால் அவர் ரொனால்டோ போல் வெவ்வேறு லீக்குகளில் விளையாடி ஒருபோதும் சவால்களை எதிர்கொள்ளவில்லை."


தற்போது, மெஸ்ஸி கேம்ப் நோ (Camp Nou) அணியில் தொடருவார் என்று தெரிகிறது, ரொனால்டோ Turin அணியில் இருப்பார்.


Also Read | One rupee Coin value 1 lakh: ஒற்றை ரூபாய் நாணயத்தை கொடுத்து லட்ச ரூபாய் பெறலாம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR