MS Dhoni: தல தோனி- சாக்ஷியின் திருமண நாளுக்கு ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்
இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி (MS Dhoni), அவரது மனைவி சாக்ஷி ஆகியோர் தங்கள் 11 வது திருமண ஆண்டு விழாவை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4) கொண்டாடி வருகின்றனர்.
இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி (MS Dhoni), அவரது மனைவி சாக்ஷி ஆகியோர் தங்கள் 11 வது திருமண ஆண்டு விழாவை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4) கொண்டாடி வருகின்றனர். உலகக் கோப்பை வெற்றிக்கு டீம் இந்தியாவை வழிநடத்திய தோனி, அதற்கு ஒரு வருடம் முன்னதாக தோனி 2010 ஆண்டு சாக்ஷி யை திருமணம் செய்தார்.
இருப்பினும், இருவரும் தங்கள் திருமணத்தை வெளியில் அம்பலப்படுத்தாமல், ஏற்பாடு செய்ததால் அவர்களது திருமண செய்தி நாடு முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பிப்ரவரி 6, 2015 அன்று தோனியும் சாக்ஷிக்கும் பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தையின் பெயர் Ziva .
2020 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற எம்.எஸ்.தோனி, நாட்டை வழிநடத்திய மிகவும் மரியாதைக்குரிய, வெற்றிகளை குவித்த கேப்டன்களில் ஒருவராகவும், இருந்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக்கில் ((IPL) தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸை (CSK) வழிநடத்தும் தோனியின் வளர்ச்சியில் சாக்ஷி முக்கிய பங்கு வகித்துள்ளார்.
சி.எஸ்.கே மற்றும் ரசிகர்கள் தோனி மற்றும் சாக்ஷியின் 11 வது திருமண ஆண்டு விழாவிற்கு அவ்ரக்ளை வாழ்த்தி பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவுகள்:
ALSO READ | நடராஜனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த யோகி பாபு; புகைப்படங்கள் வைரல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR