IPL 2020: CSK கேப்டன் எம் எஸ் தோனியின் COVID-19 Test முடிவு என்ன?
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம் எஸ் தோனியின் கொரோனா பரிசோதனை முடிவுகள் தற்போது வந்துவிட்டன என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
IPL அணியின் மிக வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) கேப்டன் மகேந்திர சிங் தோனி (MS Dhoni), இந்த போட்டிகளுக்கான பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்கு முன்னர் கொரோனா வைரஸ் சோதனை செய்துகொண்டார். தோனியின் கொரோனா பரிசோதனை முடிவுகள் தற்போது வந்துவிட்டன என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்துள்ளன.
IPL 13 வது சீசனுக்கு முன்னதாக, CSK ஏற்பாடு செய்துள்ள ஒரு வார பயிற்சி முகாமில் கலந்துகொள்ள இனி தோனி சென்னைக்கு புறப்படுவார் என தெரியவந்துள்ளது.
COVID-19 காரணமாக, IPL இந்த ஆண்டு செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இல் நடைபெறும்.
சென்னையில் நடக்கும் பயிற்சி முகாமில் சேருவதற்கு முன்பு தோனியும் CSK-வின் மற்றொரு ஆட்டக்காரருமான மோனும் குமார் சிங்கும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டனர். தனியார் குருநானக் மருத்துவமனையில் உள்ள மைக்ரோ பிராக்சிஸ் ஆய்வகம் புதன்கிழமை மாநில தலைநகரில் உள்ள சிமாலியாவைச் சேர்ந்த பண்ணை வீட்டில் இருந்து தோனியின் மாதிரியை பரிசோதனைக்கு எடுத்தது.
ALSO READ: IPL 2020: COVID பரிசோதனை செய்துகொண்டார் CSK கேப்டன் MS Dhoni!!
BCCI தயாரித்த ஸ்டாண்டர்ட் ஆப்பரேட்டிங் நடைமுறையின் (SOP) படி, அணி வீரர்கள் சென்னையை அடைந்த பிறகு மீண்டும் ஒரு முறை பரிசோதிக்கப்படுவார்கள்.
முன்னதாக, IPL 2020 மார்ச் 29 அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கோவிட் -19 காரணமாக போட்டிகள் பல முறை ஒத்திவைக்கப்பட்டன. முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸின் பீல்டிங் பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக்கின் கோவிட் -19 பரிசோதனையின் முடிவுகள் பாசிட்டிவாக வந்தன. கிங்ஸ் வெவன் பஞ்சாப் வீரர் கருண் நாயர் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது குணமடைந்து விளையாட்டு மைதனாத்திற்குத் திரும்ப முழுமையாக தயாராக உள்ளார்.
கொரோனா தொற்று காலத்தில் வீரர்களின் பாதுகாப்பிற்காக BCCI மற்றும் IPL நிர்வாகம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பல வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றைக் கண்டிப்பாகக் கடைபிடிக்குமாறு அனைத்து அணிகளும் வீரர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
ALSO READ: IPL 2020: ராஞ்சியில் நெட் பயிற்சியைத் துவக்கினார் CSK கேப்டன் MS Dhoni!!