கடந்த ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி மேட்சுக்குப் பிறகு தோனி கோபத்தில் டிவியை குத்தியதாக ஹர்பஜன் சிங் கூறினார். ஆனால், அப்படி ஒன்று நடக்கவே இல்லை, அது முற்றிலும் பொய், குப்பையான பேச்சு என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் சிம்செக் பதிலளித்துள்ளார். தோனி எந்த ஐபிஎல் போட்டிக்குப் பிறகும் ஆக்ரோஷமாக நடந்ததை நான் பார்த்ததே இல்லை என்றும் சிம்செக் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹர்பஜன் சொன்னது என்ன?


"கடந்த ஐபிஎல் போட்டியில், ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது. இதனால் தோனி கடும் கோபமடைந்தார். வேகமாக டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்று அவர் அங்கிருந்த டிவியில் ஆர்சிபி அணி கொண்டாடுவதை பார்த்து, கோபத்தில் அந்த டிவியின் ஸ்கிரீனுக்கு அருகில் சென்று, கையில் வேகமாக குத்தினார். பரவாயில்லை, விளையாட்டில் நடக்கக்கூடிய ஒன்றுதான்" என ஹர்பஜன் பாட்காஸ்ட் பேட்டியில் கூறினார். அவரின் இந்த பேச்சு கிரிக்கெட் வட்டாரத்தில் வைரலாக பரவியது. 


மேலும் படிக்க | நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பும்ராவிற்கு ஓய்வு? இந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்!


சிஎஸ்கே பீல்டிங் பயிற்சியாளர் பதில்


இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டாமி சிக் இன்ஸ்டாகிராமில் பதில் அளித்துள்ளார். அவரிடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, "அது குப்பையான தகவல், அப்படி ஒன்று நடக்கவே இல்லை. தோனி எந்தவொரு ஐபிஎல் போட்டிக்கு பிறகும் ஆக்ரோஷமாக நடந்ததை நான் பார்த்ததே இல்லை. போட்டிக்குப் பிறகு ஆர்சிபி அணியினர் கொண்டாடினர். சிஎஸ்கே வீரர்கள், ஆர்சிபியோடு கை குலுக்க தயாராக இருந்த நிலையில், ஆர்சிபி அணியினர் மைதானத்தில் நீண்ட நேரமாக கொண்டாடினர். அவர்கள் வர தாமதமானதால் கைகுலுக்க தயாராக இருந்த தோனி டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றுவிட்டார். அங்கிருந்த ஆர்சிபி அணியினருடன் கைகுலுக்கினார்" என தெரிவித்துள்ளார்.


பரபரப்பான போட்டி


கடந்த ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி, சென்னை அணியை வீழ்த்தினால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்குள் தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் களமிறங்கியது. விராட்கோலி, டூபிளசிஸ் உள்ளிட்டோரின் சிறப்பான ஆட்டத்தை 200 ரன்களுக்கும் மேலாக குவித்த அந்த அணி, 191 ரன்களுக்குள் சென்னை அணியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நெருக்கடியையும் சமாளித்தனர். இதனால் அந்த போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ஆர்சிபி அணியினர் துள்ளிக் குதிக்க, மைதானமே மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பின் உட்சமாகவும் இருந்தது. ஒரு சிறப்பான ஐபிஎல் போட்டியாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஆர்பிசி மேட்ச் இருந்தது.


மேலும் படிக்க | மகளிர் டி20 உலகக்கோப்பை இன்று தொடக்கம், இந்திய அணியின் முதல் போட்டி விவரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ