மகளிர் டி20 உலகக்கோப்பை இன்று தொடக்கம், இந்திய அணியின் முதல் போட்டி விவரம்

Women's T20 World Cup : ஒன்பதாவது மகளிர் இருபது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் இன்று துவங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளன. 

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 3, 2024, 08:50 AM IST
  • மகளிர் டி20 உலகக்கோப்பை இன்று தொடக்கம்
  • பாகிஸ்தான் அணி முதல் நாளில் விளையாடுகிறது
  • இந்தியா நியூசிலாந்துடன் நாளை முதல் போட்டியில் ஆடுகிறது
மகளிர் டி20 உலகக்கோப்பை இன்று தொடக்கம், இந்திய அணியின் முதல் போட்டி விவரம்

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகளிர் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒன்பதாவது உலககோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற இருந்த நிலையில் அங்கு ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு மாற்றப்பட்டது. இன்று தொடங்கும் மகளிர் டி20 உலகக்கோப்பை வருகிற இருபதாம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. துபாய் மற்றும் சார்ஜாவில் உள்ள மைதானங்களில் இந்த போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. 

Add Zee News as a Preferred Source

ஒன்பதாவது மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து என மொத்தம் பத்து அணிகள் கலந்து கொண்டுள்ளன. இதில் தலா 5 அணிகள் என மொத்தம் இருக்கும் பத்து அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் லீக் சுற்றில் ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்றுகள் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரை இறுதி போட்டிக்கு முன்னேறும். முதல் அரை இறுதி அக்டோபர் 17-ந் தேதியும், 2-வது அரை இறுதி 18-ந் தேதியும், இறுதிப்போட்டி அக்டோபர் 20-ந் தேதியும் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க | நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பும்ராவிற்கு ஓய்வு? இந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்!

இன்று நடைபெறும் துவக்க  ஆட்டங்களில் வங்காளதேசம்-ஸ்காட் லாந்து அணிகள் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நாளை நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இதுவரை எட்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் நடந்து முடிந்து உள்ள நிலையில் ஆஸ்திரேலியா அணி அதிகபட்சமாக இரண்டு முறை ஹாட்ரிக் சாம்பியன் பட்டத்துடன் ஆறு முறை கோப்பையை கைப்பற்றி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா ஒரு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றவில்லை. ஒருமுறை மட்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. ஹர்மன் ப்ரீத் தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி இந்த முறை கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

குரூப் ஏ: ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, 

குரூப் பி: வங்கதேசம், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்,

டி20 உலக க்கோப்பை நேரலை : ஹாட்ஸ்டார், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்

மேலும் படிக்க | ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பளிக்காதது ஏன்...? கம்பீர் போடும் தனி கணக்கு - முழு பின்னணி இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News