ஹாட்ரிக் தோல்வி அடைந்த சிஎஸ்கே!
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஐபிஎல் 2021ல் இன்று 53வது போட்டியில் சிஸ்க்கே அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. டாஸ் வென்ற ராகுல் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். டாஸின் போதே சென்னை கேப்டன் தோனி அடுத்த ஆண்டு சென்னை அணிக்காக விளையாடுவது கடினம் என்று கூறி இருந்தார்.
கடந்த இரண்டு போட்டிகளில் சொதப்பிய சென்னை அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டி விளையாடியது. பிளே ஆப்பிர்க்கு செல்ல இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது பஞ்சாப் அணி. கடந்த போட்டியில் சொதப்பிய சென்னை அணியின் ஓபனிங் பாட்நெர்ஷிப் இந்த போட்டியிலும் தொடந்தது. ருத்ராஜ் 12 ரங்களுக்கும், மெயின் அலி 0 ரங்களுக்கும், உத்தப்பா 2 ரங்களுக்கும் வெளியேறினர். பின் களமிறங்கிய ராயுடு 4 ரன்களுக்கும், தோனி 12 ரன்களுக்கும் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய டுப்லெஸிஸ் 55 பந்துகளில் 76 ரன்கள் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.
20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் அடித்தது. எளிய இலக்கை விரட்டிய பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் சென்னை அணியின் பவுலர்களை சிதறடித்தார். 42 பந்துகளில் 98 ரன்கள் விளாசிய ராகுல் 13 ஓவரிலேயே அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். தொடந்து வெற்றி பெற்று வந்த சென்னை அணி தொடர்ந்து 3 போட்டிகளில் தற்போது தோல்வி அடைந்துள்ளது. இருப்பினும் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. நாளைய போட்டியில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் தோல்வி பெரும் பட்சத்தில் பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும்.
ALSO READ 2022ல் சிஎஸ்கேவில் இருப்பேனா என்பது தெரியவில்லை - எம்.எஸ். தோனி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G