2022ல் சிஎஸ்கேவில் இருப்பேனா என்பது தெரியவில்லை - எம்.எஸ். தோனி

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் 2021 போட்டியின் டாஸில் போது, 2022 ஆம் ஆண்டில் சிஸ்க்கேவில் இருப்பேனா என்பது தெரியாது என்று தோனி பதிலளித்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 7, 2021, 06:16 PM IST
2022ல் சிஎஸ்கேவில் இருப்பேனா என்பது தெரியவில்லை - எம்.எஸ். தோனி  title=

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் லில் விளையாடுவாரா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.  இது குறித்து இன்று தோனி, 2022 ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) ஒரு பகுதியாக இருப்பேன், ஆனால்  சிஎஸ்கே அணிக்காக விளையாடுவேனா என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார். 

"அடுத்த சீசனில் நீங்கள் என்னை மஞ்சள் நிறத்தில் பார்ப்பீர்கள் ஆனால் நான் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவேனா என்பது தெரியாது" என்று தோனி இன்றைய போட்டியின் டாஸ் போடும் பொழுது கூறினார்.  "இரண்டு புதிய அணிகள் வருகின்றன, பழைய வீரர்களை அணியில் தக்க வைப்பது பற்றி என்னவென்று எங்களுக்குத் தெரியாது," என்றும் கூறினார்.

dhoni

40 வயதான தோனி  இந்த மாத இறுதியில் தொடங்கும் 2021 டி 20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.  சென்னையில் தான் என்னுடைய கடைசி போட்டியில் விளையாடுவேன் என்று சிறிது தினங்களுக்கு முன்பு இந்தியா சிமென்ட்ஸின் 75 வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக ஆன்லைன் உரையாடலில் தோனி  தோனி கூறியிருந்தார்.

தற்போது தோனி தலைமையிலான சிஸ்க்கே அணி ஐபிஎல் 2021ல் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.  தொடர்ந்து சிஸ்க்கே அணிக்காக விளையாடுவேன் என்று கடந்த ஆண்டு தோனி கூறி இருந்தார்.  தற்போது தோனியின் இந்த கருத்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  அடுத்த ஆண்டும் தோனி சிஸ்க்கே அணிக்காக விளையாட வேண்டும் என்பதே சிஸ்க்கே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

ALSO READ 4வது அணியாக பிளே ஆப் செல்ல போட்டி போடும் 4 அணிகள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Trending News