தோனிக்குப்பிறகு சிஎஸ்கே கேப்டன் இவரா? ஜடேஜா இல்லை

தோனிக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இளம் வீரர் கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் தொடருக்கு விடை கொடுக்க இருக்கிறார். அதன் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இயக்குநராக அவர் செயல்படுவார் என கூறப்படுகிறது. ஆனால், கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்கள் என்பது குறித்து பலரும் பல யூகங்களை தெரிவித்து வருகின்றனர். ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், அவருடைய செயல்பாட்டில் அணி நிர்வாகத்திற்கு திருப்தி இல்லாமல் போனது. இதனால், அவரை மீண்டும் கேப்டனாக நியமிக்கும் என்ன சிஎஸ்கே நிர்வாகத்துக்கு இல்லை.
மேலும் படிக்க | அழகி உடன் கணவரின் நெருக்கமான படங்கள் - சானியா மிர்சா விவாகரத்துக்கு இதுதான் காரணமா?
அப்படி இருக்கும்போது ஒரு இளம் வீரரை கேப்டனாக நியமிக்கலாம் என்பது இப்போதைக்கு சிஎஸ்கேவின் திட்டமாக இருக்கிறது. அதன்படி, ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கேவின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஏனென்றால், விஜய் ஹசாரே போட்டியில் கேப்டனாகவும், ஒரு வீரராகவும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதனை சிஎஸ்கே அணி நிர்வாகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
உத்தரப்பிரதேச அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ், 159 பந்துகளில் 220 ரன்களை குவித்தார் . இதில் 16 சிக்ஸர்களும் 10 பௌண்டரிகளும் அடங்கும். இதே போட்டியில் அவர் ஒரே ஓவரில் ஏழு சிக்ஸர்களை அடித்து உலக சாதனையும் படைத்தார். ஒரு கேப்டனாகவும், பிளேயராகவும் அணியை சிறப்பாக வழிநடத்துவதால், ருதுராஜின் பெயரும் இப்போதைக்கு சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் பரிசீலனையில் இருக்கிறதாம்.
மேலும் படிக்க | உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடினால் என்ன? முடிவுக்கு வரும் முக்கிய வீரரின் பயணம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ