சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையினை தற்போது நீக்கியுள்ள நிலையில் சூப்பர் கிங்க்ஸ் சுதந்திர தின வாழ்த்துகளுடன் தங்களது ரீஎன்ட்ரி குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக சூதாட்டம் தொடர்பான வழக்கில் சென்னை சூப்பர் கிங்க்ஸ்க்கு தடைவிதிக்க பட்டிருந்ததால் கடந்த 2 ஆண்டுகளாக IPL தொடரில் விளையாடாமல் இருந்தது. தற்போது தடையினை நீக்கியுள்ள நிலையில் IPL 2018-ல் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளது.


இந்நிலையில் ராயல் சாலேன்சர்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளது யாதெனில்,


 



 


"சென்னை சூப்பர் கிங்க்ஸ்" -னை தென்இந்திய டெர்பி 2018-ல் எதிர்பார்க்கின்றோம் என குறிப்பிட்டு இருந்தது.


 



 


இதற்கு உடனடி பதிலளித்த CSK, காத்திருக்க வேண்டாம் விரைவில் வருகிறோம் என பதிவிட்டுள்ளனர்.