IPL Auction-ல் CSK தோனியை retain செய்யக் கூடாது என இவர் கூறுவது ஏன் தெரியுமா?
தோனியை விடுவிக்க முடிவு செய்தால் CSK-வுக்கு ரூ .15 கோடி இருப்பு கிடைக்கும் என்றும் இந்த பணத்தை மற்ற வீரர்களை வாங்க அவர்கள் பயன்படுத்தலாம் என்றும் சோப்ரா கூறினார்.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2021 துவங்குவதற்கு முன்பு மெகா ஏலம் நடந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மகேந்திர சிங் தோனியை தக்க வைத்துக் கொள்ளாமல் விடுவிக்க வேண்டும் என்று இந்தியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
தோனியை விடுவிக்க முடிவு செய்தால் CSK-வுக்கு ரூ .15 கோடி இருப்பு கிடைக்கும் என்றும் இந்த பணத்தை மற்ற வீரர்களை வாங்க அவர்கள் பயன்படுத்தலாம் என்றும் சோப்ரா கூறினார்.
CSK தோனியை (MS Dhoni) மீண்டும் ஆக்ஷன் பூலில் விடுவிக்க வேண்டும் என்றும், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் அவரை ரைட் டு மேட்ச் (RTM) கார்டைப் பயன்படுத்தி அணியில் சேர்க்க முடியும் என்றும் சோப்ரா கூறினார்.
"மெகா ஏலத்தில் எம்.எஸ்.தோனியை CSK வெளியிட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மெகா ஏலத்தில் வாங்கும் வீரர்கள் உங்களுடன் மூன்று ஆண்டுகள் இருப்பார்கள். ஆனால் தோனி உங்களுடன் மூன்று ஆண்டுகள் இருப்பாரா? தோனியை வைத்திருக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை, அவர் அடுத்த ஐபிஎல் விளையாடுவார். அதன் பிறகு ஆடுவாரா என தெரியாது. ஆனால் நீங்கள் அவரை ஒரு தக்கவைத்துக்கொள்ளும் வீரராக வைத்திருந்தால், நீங்கள் ரூ .15 கோடி செலுத்த வேண்டியிருக்கும். அது வீண்” என்று ஆகாஷ் சோப்ரா தனது பேஸ்புக் கணக்கில் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.
"CSK-வுக்கு மெகா ஏலம் தேவை. அந்த அணியிடம் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் அதிக வீரர்கள் இல்லை. அவர்கள் புதிதாக ஒரு அணியை உருவாக்க விரும்பினால், ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் அம்பத்தி ராயுடு போன்றவர்களுக்கு பெரிய பணத்தை செலவிட தயாராக உள்ளார்களா? CSK புது அணியை உருவாக்கினால், ரெய்னா மற்றும் ஹர்பஜன் போன்றவர்களைப் பற்றி சிந்திப்பார்கள் என எனக்குத் தோன்றவில்லை” என்று சோப்ரா கூறினார்.
சமீபத்தில் முடிவடைந்த IPL 2020 இல் CSK மிக மோசமாக விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களுக்கும் மற்ற அணிகளுக்கும் கூட CSK-வின் ஆட்டம் ஆச்சரியத்தை அளித்தது. ஏனெனில் அணி 14 போட்டிகளில் 6 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. IPL வரலாற்றில் தோனி தலைமையிலான அணி IPL பிளேஆஃப்களை அடையத் தவறியது இதுவே முதல் முறையாகும்.
ALSO READ: ஐபிஎல் 2021 ஏலத்திற்கு முன், பல அணிகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR