IPL 2021: CSK உடன் தொடரும் சின்ன தல Suresh Raina-வின் பயணம்!!
முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா, டி 20 நட்சத்திர ஆட்டக்காரர் டுவைன் பிராவோ மற்றும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோர் CSK அணியில் நீடிப்பார்கள்
இந்தியன் பிரீமியர் லீக்கின் எதிர்வரும் சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னாவை தக்கவைத்துக் கொள்ளும் என தெரிய வருகிறது. ANI-யின் ஒரு அறிக்கையின்படி, இடது கை பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா அணியில் தொடருவார் என கூறப்பட்டுள்ளது.
எனினும், கேதார் ஜாதவ், முரளி விஜய் மற்றும் பியூஷ் சவாலா ஆகியோரின் நிலைமை என்னவென்பது இன்னும் தெளிவாகவில்லை. டி 20 நட்சத்திர ஆட்டக்காரர் டுவைன் பிராவோ மற்றும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் (Faf du Plessis) ஆகியோரும் அணியில் நீடிப்பார்கள் என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.
முன்னதாக புதன்கிழமை காலை, ஹர்பஜன் சிங் (Harbhajan Singh) ஒரு ட்வீட்டில் அவர் சி.எஸ்.கே-விலிருந்து வெளிவந்துள்ளதாக கூறியிருந்தார். அதாவது அவரை வேறு எந்த அணியும் இனி ஏலத்தில் வாங்க முடியும்.
"சுரேஷ் ரெய்னா (Suresh Raina) நிச்சயமாக சிஎஸ்கே குடும்பத்தின் ஒரு அங்கமாக இருப்பார். அவர் அணியின் ஒரு ஒருங்கிணைந்த உறுப்பினராக இருந்துள்ளார். அவர் அணியில் தக்கவைக்கப்படுவாரா இல்லையா என்பதில் எப்போதும் எந்த சந்தேகமும் இருந்ததில்லை. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திரும்பியது அவரது தனிப்பட்ட முடிவாக இருந்தது. அணியும் நிர்வாகமும் அவரது முடிவுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தன. அடுத்த IPL போட்டிகளில் அவர் வழக்கமான ஆக்ரோஷத்துடன் விளையாடுவார் என்பதில் சந்தேகமில்லை. கேதார், பியூஷ் மற்றும் விஜய் ஆகியோரைப் பொறுத்தவரை, நாங்கள் இன்னும் யோசிக்க வேண்டும். இன்று BCCI இடம் இறுதி பட்டியலை அளிப்பதற்கு முன் வீர்ரகள் குறித்த முடிவு நிர்வாகத்தால் எடுக்கப்படும்” என்று CSK நிர்வாகத்திற்கு நெருங்கிய வட்டாரத்திடமிருந்து செய்தி வந்ததாக ANI தெரிவித்துள்ளது.
ALSO READ: BCCI: India vs England முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்கள் அறிவிப்பு
"ஹர்பஜன் சிங் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஷேன் வாட்சன் ஓய்வு பெற்று விட்டார். இது தவிர பெரிய வீரர்களில் பெரும்பாலும் எந்த மாற்றமும் இருக்காது. பிராவோ (Bravo) மற்றும் டு பிளெசிஸ் அணியுடன் தான் இருப்பார்கள்” என்று அந்த வட்டாரம் சுட்டிக்காட்டியது.
IPL-ன் எட்டு அணிகளும் புதன்கிழமை மாலைக்குள் தாங்கள் தக்கவைத்துக் கொள்ளப்போகும் வீரர்களின் பட்டியலை BCCI-க்கு சமர்ப்பிப்பார்கள்.
2020 ஆம் ஆண்டைத் தவிற மற்ற ஆனைத்து IPL போட்டிகளிலும் CSK அணி பிளேஆஃப் நிலைக்கு தகுதி பெற்றுள்ளது. மூன்று முறை IPL தொடரைக் கைப்பற்றியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி 2020 ஆம் ஆண்டில் மோசமாக விளையாடி அனைத்து ரசிகர்களையும் வேதனைக்குள்ளாக்கியது. எட்டு அணிகள் பங்கு கொண்ட போட்டியில் லீக் நிலையில் CSK அணி ஏழாவது இடத்தையே பெற்றது. 14 போட்டிகளில் அணி ஆறு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
ALSO READ: IND vs Aus: Brisbane டெஸ்டில் இந்தியா அபார வெற்றி, ஆஸ்திரேலியாவில் அமர்க்களம்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR