மீண்டும் பவுலிங்கில் சொதப்பல்! சிஎஸ்கே-விற்கு எமனாக வந்த ரஷித் கான், மில்லர்!
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2022-ன் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகி இருந்தார், அவருக்கு பதிலாக ரஷித் கான் கேப்டனாக வழிநடத்தினார். டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.
மேலும் படிக்க | மாஸ் காட்டிய ஹைதராபாத்! தொடர்ந்து 4-வது வெற்றி!
கடந்த சில போட்டிகளாக சரியாக விளையாடாமல் இருந்த ருதுராஜ் இந்த போட்டியில் பழைய பார்முக்கு திரும்பினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த உத்தப்பா மற்றும் மொயின் அலி சொற்ப ரன்களுக்கு வெளியேறினார். ருதுராஜ் மற்றும் அம்பதி ராயுடு இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கிட்டத்தட்ட 90 ரன்களுக்கு மேல் இந்த கூட்டணி பார்ட்னர்ஷிப் வைத்திருந்தது. ருத்ராஜ் 73 ரன்களும், ராயுடு 46 ரன்களுக்கும் வெளியேறினர். கடைசியாக ரவீந்திர ஜடேஜா 12 பந்துகளில் 22 ரன்கள் அடிக்க சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்தது.
அடிக்கக்கூடிய இலக்கை எதிர்த்து ஆடிய குஜராத் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. சுஷுப்மான் கில், விஜய் சங்கர் அடுத்தது 0 ரன்களில் வெளியேறினர். 2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது குஜராத். சென்னை அணியில் மகேஷ் தீக்ஷனா கடந்த போட்டியை போலவே இந்தப் போட்டியிலும் சிறப்பாக பந்து வீசினார். ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் மறுபுறம் டேவிட் மில்லர் அதிரடி காட்டிக்கொண்டிருந்தார். கடைசியாக பார்ட்னர்ஷிப் போட்ட மில்லர் மற்றும் ரஷீத் கான் சிஎஸ்கே பவுலர்களை பறக்க விட்டனர். 17-வது ஓவரில் கேப்டன் ரஷீத்கான் ஜோர்டனின் ஓவரில் சிஸ்சர்கள் மற்றும் பவுண்டரிகளை பறக்கவிட்டார். அந்த ஓவரிலேயே போட்டி குஜராத் பக்கம் திரும்பியது. கடைசிவரை நின்று ஆடிய டேவிட் மில்லர் 94 ரன்கள் அடித்து குஜராத் அணியை வெற்றி பெறச் செய்தார். இந்த சீசனில் சென்னை அணி மீண்டும் ஒருமுறை பவுலிங்கில் சொதப்பி இந்த போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.
மேலும் படிக்க | மீண்டும் சிஎஸ்கே அணியில் ரெய்னா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR