Chennai Super Kings: ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடக்கும் உள்ளூர் போட்டியான ஐபிஎல் (IPL) என்றாலே இங்குள்ள இந்திய மக்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். அதுவும் தங்களுக்கு பிடித்த அணி இறுதிப் போட்டிக்கு (IPL Final) வந்து கோப்பையை வெல்ல வேண்டுமென்பதே ஒவ்வொரு ஐபிஎல் ரசிகர்களின் தீராத கனவாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிலும் குறிப்பாக தமிழக மக்கள் மற்ற அணி ரசிகர்களை விட ஒரு படி மேல் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai super kings) அணியை எந்த இடத்திலும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.


ஐபிஎல் மேட்ச் என்றாலே சென்னை (Chennai Team) அணி ரசிகர்களும் மும்பை (Mumbai Team) அணி ரசிகர்களும் எதிரெதிர் துருவங்கள் தான். அதுவும் இரு அணி ரசிகர்களும் சமூக வலைதள பக்கங்களில் ஒரு மினி டபிள்யூ டபிள்யூ (WWE) சண்டைக் காட்சியையே நடத்தி விடுவார்கள்.


சென்னை சேப்பாக் (Chepauk stadium) எங்க கோட்டடா! என்று சென்னை சூப்பர் கிங்ஸ்  ரசிகர்களும், வான்கடே ஸ்டேடியம் (Wankhede Stadium) எங்க கோட்டடா! என்று மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களும் மல்லுக் கட்டிக் கொள்வார்கள். 


ALSO READ | IPL 2021: ஐபிஎல் போட்டிகளில் விளையாட ஐக்கிய அமீரகம் சென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்


இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லையென்றாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai super kings) ஒரு படிமேல் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒட்டுமொத்த ஐபிஎல் அணிகளிலேயே சமூக வலைதள (Social Media) பக்கமான இன்ஸ்டாகிராமில் (Instagram) முதன்முதலாக 8 மில்லியன் (8 Million) பாலோவர்ஸ்களை கொண்டு வெற்றி நடைபோடுகிறது. இதற்கடுத்து இரண்டாவதாக மும்பை இந்தியன்ஸ் அணி (Mumbai Indians) 7.5 மில்லியன் (7.5 Millions) பாலோவர்ஸ்களை கொண்டு இரண்டாமிடத்தில் உள்ளது.


இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் சிங்கம் என்னைக்குமே சிங்கம் தாண்டா! இது சென்னை சூப்பர் கிங்ஸ் டா இன்று மாஸான வசனங்களுடன் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.


இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) டி-20 கிரிக்கெட் லீக் ஆகும். இதில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கிறது. இந்த லீக் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (Board of Control for Cricket in India) 2007 இல் நிறுவப்பட்டது. இதுவரை 13 சீசன் முடிந்துள்ளது. இந்தாண்டு 14  வது சீசன் நடைபெற்றது. ஆனால் கொரோனா காரணமாக பாதி போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டது. மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் மீண்டும் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அமீரகத்தில் நடக்க உள்ளது. 


ALSO READ | IPL 2021 மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணையை BCCI அறிவித்தது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR