CSK அணி இந்த இங்கிலாந்து வீரரை வேற லெவலுக்கு கொண்டு போயிடுச்சு: Graham Thorpe

பல புதிய கிரிக்கெட் வீர்ரகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுத்ததில் சி.எஸ்.கே முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த வீரர்களில் ஒருவர் இங்கிலாந்தின் இளம் ஆல்ரவுண்டர் சாம் குர்ரான்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 3, 2021, 08:53 PM IST
  • மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல வீரர்களின் வாழ்வையே மாற்றியுள்ளது.
  • இந்த வீரர்களில் ஒருவர் இங்கிலாந்தின் இளம் ஆல்ரவுண்டர் சாம் குர்ரான்.
  • 23 வயதில், அவருக்கு பல அருமையான அனுபவங்கள் கிடைத்துள்ளன.
CSK அணி இந்த இங்கிலாந்து வீரரை வேற லெவலுக்கு கொண்டு போயிடுச்சு: Graham Thorpe title=

புதுடெல்லி: இந்தியாவில் நடக்கும் டி-20 சாம்பியன்ஷிப்பான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) பல பெரிய கிரிக்கெட் வீரர்களை விளையாட்டு உலகிற்கு வழங்கியுள்ளது. குறிப்பாக மகேந்திர சிங் தோனி (MS Dhoni) கேப்டனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி பல வீரர்களின் வாழ்வையே மாற்றியுள்ளது. 

பல புதிய கிரிக்கெட் வீர்ரகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுத்ததில் சி.எஸ்.கே (CSK) முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த வீரர்களில் ஒருவர் இங்கிலாந்தின் இளம் ஆல்ரவுண்டர் சாம் குர்ரான் (Sam Curran). 

சாம் குர்ரானின் கிரிக்கெட் வாழ்க்கையை மேம்படுத்திய சி.எஸ்.கே  

சாம் குர்ரான் ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக முன்னேறியதற்கு அவர் ஐபிஎல்-லில் (IPL) சிஎஸ்கே அணியுடன் விளையாடியது ஒரு மிகப்பெரிய காரணமாகும் என இங்கிலாந்தின் ஸ்டாண்ட்-இன் பயிற்சியாளர் கிரஹாம் தோர்பே நம்புகிறார். 

ஜூலை 1 ம் தேதி நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான சாம், இலங்கையின் துவக்க மற்றும் நடு வரிசை பேட்ஸ்மேன்களை தனது பந்துவீச்சால் படுத்தி எடுத்தார். 5/48 என்ற புள்ளிகளுடன் சாம், ஏழு ஓவர்கள் மிச்சமிருக்க, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற பெரும் உதவியாக இருந்தார். 

ALSO READ: எம்.எஸ்.தோனியிடம் உள்ள சிறந்த கார்களின் தொகுப்பு -வீடியோவை பகிர்ந்த சாக்ஷி

பயிற்சியாளர் ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டார்

முன்னாள் கிரிக்கெட் வீரர் வெள்ளிக்கிழமை ESPNcricinfo இடம் பேசியபோது, "IPL அவருக்கு பெரிய அளவில் உதவி உள்ளது என்று நினைக்கிறேன். சாம் எந்த சூழலில் இருந்தாலும், அவர் போட்டியிடுவதற்கான திறனைக் காட்டியுள்ளார். அந்தக் கண்ணோட்டத்தில், ஐ.பி.எல்லில் விளையாடியது அவரை வெகுவாக மேம்படுத்தியுள்ளது" என்று கூறினார். 

சாம் குர்ரான் உலகக் கோப்பையில் முக்கிய வீரராக இருப்பார் 

சாம் நல்ல ஃபார்மில் இருப்பதாக தோர்பே நம்புகிறார், இந்த ஆண்டு இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி டி 20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு அவர் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்று தோர்பே கூறினார். அவரிடம் பேட்டிங் செய்யும் திறனும் நன்றாக உள்ளது. இதுவும் நல்ல முறையில் முன்னேறியுள்ளது என்று நான் நினைக்கிறேன். ஐ.பி.எல்லில் முக்கியமான போட்டிகளில் அவர் பந்து வீசி வருகிறார். 23 வயதில், அவருக்கு பல அருமையான அனுபவங்கள் கிடைத்துள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ALSO READ: India vs England: ஆரம்பம் ஆகிறது இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News