நியூசிலாந்து அணியின் மூத்த வீரர் நெய்ல் வாக்னர் அண்மையில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு இருப்பதாக நியூசிலாந்து கேப்டன் டிம் சவுதி தெரிவித்துள்ளார். இதனை ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் கிண்டலடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி இப்போது நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்திருக்கிறது. அந்த அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை முழுமையாக கைப்பற்றிய அந்த அணி அடுத்ததாக டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்த 5 ஐபிஎல் சாதனைகளை யாராலும் முடியடிக்க முடியாது!


இதில் முதல் போட்டியில் 172 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி படுதோல்வியை சந்தித்தது. இதனால் ஆடிப்போய் இருக்கும் நியூசிலாந்து அணி அடுத்த போட்டியில் பிளேயிங் லெவனில் அதிரடியாக மாற்றங்களை செய்ய இருக்கிறது. நியூசிலாந்து அணியில் முதல் போட்டியில் விளையாடிய இளம் வீரர் வில்லியம் ஓரௌர்க்கே 8 பந்துகளை மட்டுமே வீசிய நிலையில் காயமடைந்தார். அவருக்கு பதிலாக, நெய்ல் வாக்னரை களமிறக்க நியூசிலாந்து அணி முடிவெடுத்துள்ளது. இது குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுதி, எங்களது அணியில் இளம் வீரர் ஓரௌர்க்கே காயமடைந்துள்ளார். 


அதனால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை களமிறக்க வேண்டும். அந்த இடத்துக்கு அண்மையில் நியூசிலாந்து அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நெய்ல்  வேக்னர் பெயரையே பரிசீலனையில் வைத்துள்ளோம். அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தாலும் கடந்த சில நாட்களாக அணியுடன் தான் இருக்கிறார். ரசிகர்களிமும் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே பிளேயிங் லெவனில் சேர்ப்பது குறித்து வேக்னரிடம் கலந்து பேசி முடிவெடுப்போம் என தெரிவித்துள்ளார். 


இது குறித்து பேட் கம்மின்ஸ் பேசும்போது, " வேக்னர் ஓய்வு அறிவிப்பு தான் உலகிலேயே மிகவும் குறுகிய கால ரிட்டையர்மென்ட் அறிவிப்பாக இருக்கும் என நினைக்கிறேன். இருப்பினும் சிறந்த பவுலராக நீங்கள் நினைக்கும்பட்சத்தில் அவரின் ஓய்வு முடிவை திரும்ப பெறுமாறு கேட்பதில் தவறில்லை. நானும் அவரிடம் பேசியிருக்கிறேன். நல்ல எனர்ஜியுடன் இருக்கும் ஒரு பிளேயர் அவர்" என தெரிவித்தார். 37 வயதாகும் வேக்னர் 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இதுவரை 264 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.


மேலும் படிக்க | ’கேப்டன் ரொம்ப தப்பு பண்ணிட்டார்’ ரஞ்சி கோப்பை தோல்வி - தமிழ்நாடு பயிற்சியாளர் புகார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ