ICC T20 World Cup : அப்பாடா... இந்தியா போட்டிக்கு இந்த இங்கிலாந்து வீரர் கிடையாதா?
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் காயமடைந்த இங்கிலாந்து பேட்டர், இந்தியா உடனான அரையிறுதியில் விளையாட வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் காயமடைந்த இங்கிலாந்து பேட்டர், இந்தியா உடனான அரையிறுதியில் விளையாட வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.
டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒற்றை உலகக்கோப்பைக்கு தற்போது நான்கு அணிகள் முட்டி மோதிக்கொண்டு, அரையிறுதியில் முழு உத்வேகத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றன. கடந்த செப். 16ஆம் தேதி தொடங்கிய இந்த உலகக்கோப்பை தொடருக்கு, இன்றும் (நவ. 7), நாளையும் (நவ. 8) ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் நாளை மறுதினமும் (நவ. 9), இரண்டாவது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நவ. 10ஆம் தேதியும் மோத உள்ளன.
இதில், இலங்கை அணியை வீழ்த்தி மிக போராடி அரையிறுதிக்கு வந்த இங்கிலாந்து அணிக்கு தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதாவது, அந்த அணியின் முன்னணி பேட்டரான டேவிட் மலானுக்கு கடந்த போட்டியில் காயம் ஏற்பட்டதால், இந்தியா உடனான அரையிறுதியில் அவர் பங்கேற்பது தற்போது சந்தேகமாகியுள்ளது.
மேலும் படிக்க | Mr. 360 : பக்கத்துல வந்துட்டிங்க தம்பி... - சூர்யகுமாரை பாராட்டித் தள்ளிய ஏபிடி
இலங்கை அணியுடனான அந்த போட்டியில் பீல்டிங்கில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அவருக்கு இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அப்போதே பெவிலியனுக்கு திரும்பியிருந்தார். இந்நிலையில், இங்கிலாந்து அணியின் துணை கேப்டனான மொயின் அலி ஊடகங்களிடம் கூறும்போது,"மலானின் காயம் எளிதானதாக தோன்றவில்லை. அவர் மிகப்பெரிய வீரர், அணிக்கு கடந்த ஆண்டுகளாக மிகச்சிறப்பாக விளையாடி வரும் வீரர்களுள் ஒருவர்" எனக் கூறியுள்ளார்.
எனவே, மலான் இந்தியாவுடனான அரையிறுதியில் விளையாடுவது குறித்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. அவருக்கு பதிலாக பேட்ஸ்மேன் என்ற முறையில் பில் சால்ட் மட்டுமே அணியில் இருக்கிறார். ஒருவேளை மலான் விளையாடவில்லை என்றால், சால்ட் அணியில் சேர்க்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. டேவிட் மலான் டி20 பேட்டர்கள் தரவரிசையில் நம்பர் 1 வீரராக இருந்துள்ளார். தற்போது, தரவரிசையில் ஆறாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ