’வார்னர் ஒரு ஹீரோ’ மிட்செல் ஜான்சனுக்கு பதிலடி கொடுத்த ஆஸி கேப்டன் கம்மின்ஸ்
டேவிட் வார்னரை கடுமையாக விமர்சித்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சனுக்கு இப்போதைய கேப்டன் பாட் கம்மின்ஸ் பதிலடி கொடுத்துள்ளார். வார்னர் ஒரு ஹீரோ என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
தன்னுடைய கடைசி சர்வதேச டெஸ்ட் தொடர் எனவும் அவர் அறிவித்துள்ளார். இதனையொட்டி ஆஸ்திரேலிய கிரிக்கெட் சார்பில் டேவிட் வார்னருக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட இருக்கிறது. ஆனால் இதனை அந்த அணியின் முன்னாள் வீரரான மிட்செல் ஜான்சன் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வார்னர் குறித்து பேசும்போது, பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தியவர் அவர்.
அவரை பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் எடுத்ததே தவறு. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய வார்னருக்கு இவ்வளவு மரியாதை கொடுத்து வழியனுப்ப வேண்டுமா?. அவர் அந்தளவுக்கு தகுதியானவர் எல்லாம் இல்லை என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதற்கு பதில் அளிக்காமல் அமைதி காத்து வந்த வார்னர் முதன்முறையாக மிட்செல் ஜான்சனின் விமர்சனத்துக்கு பதில் அளித்துள்ளார். இது குறித்து வார்னர் பேசும்போது, " எல்லோரும் ஒரு கருத்து சொல்ல தகுதியுடையவர்கள். ஆனால் அதில் இருந்து தான் முன்னோக்கி நகர்ந்து, ஒரு நல்ல டெஸ்ட் போட்டி எதிர்பார்க்கிறேன்.
என் பெற்றோர் என்னை சிறப்பாக வளர்த்திருக்கிறார்கள். கடுமையாக உழைக்க கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். மோசமான நேரங்களில் இருந்து மீண்டு எழுவது, நல்ல நிலையை அடைவது எப்படி என பயிற்றுவித்திருக்கிறார்கள். உலக அரங்கில் விளையாடும்போது நிறைய விமர்சனங்கள் எழ செய்யும். அதில் நேர்மறையான விமர்சனங்களும் உண்டு. அந்தவகையில் இன்று நாம் எதை பார்க்கிறோம் என்பது தான் முக்கியம். அந்தவகையில் என்னை ஆதரிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட், மக்கள் இருக்கிறார்கள். அது எனக்கு பெருமை. மிட்செல்லின் விமர்சனம் என்னை தொந்தரவு செய்யவில்லை." என தெரிவித்துள்ளார்.
இதே கேள்விக்கு பதில் அளித்திருக்கும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், " மிட்செல் ஜான்சன் கூறியதற்கு அவரிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் இப்போது கொண்டாட்டப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. டேவிட் வார்னர் ஒரு அற்புதமான வீரர். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் அவர் ஹீரோ. கடந்த கால தவறுகளில் இருந்து வார்னர் கற்றுக் கொண்டிருக்கிறார்." என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | கெளதம் காம்பீர் வம்பிழுத்த சண்டைகள்: விராட் கோலி முதல் அப்ரிடி வரை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ