ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்ணர் தனது 33-வது பிறந்தநாளான இன்று தனது முதல் டி20 சதத்தினை பதிவு செய்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலியாவில் சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி இன்று அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்ணர் டி20 சர்வதேச தொடரில் தனது முதல் சதத்தினை பதிவு செய்துள்ளார்.


இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸி., வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 233 ரன்கள் குவித்தது. அரோன் பின்ச் 64(36) ரன்களில் வெளியேற, மறுமுனையில் டேவிட் வார்ணர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 100*(56) ரன்களை குவித்தார், இது இவரது முதல் சர்வதே டி20 சதம் ஆகும். மேலும் இன்றைய தினம் வார்ணரின் பிறந்தநாள் என்பதால், இன்றைய சதம் அவரது பிறந்தநாள் பரிசாக பார்க்கப்படுகிறது. இவருக்கு துணையாக கெளன் மேக்ஸ்வெல் 62(28) ரன்கள் குவித்தார். 



இதனையடுத்து 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இலங்கை அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட் பறிகொடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இலங்கை 9 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் மட்டுமே குவித்தது.


இலங்கை அணி தரப்பில் அதிகப்பட்சமாக தசுன் ஷங்கா 17(18) ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா 3 விக்கெட் வீழ்த்தினார். பேட் கம்மிஸ் மற்றும் மிட்சல் ஸ்டார்ச் தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர். இதனையடுத்து இலங்கை 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.