DC vs CSK Match Captain Rishabh Pant Fined Rs. 12 Lakhs: ரிஷப் பந்த் தலைமையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஐபிஎல் 2024ல் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளனர். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 போட்டியின் போது நடத்தை விதிகளை மீறியதாக டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இந்த போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக டெல்லி மெதுவான ஓவர் வீதத்தை பின்பற்றியதால் ரிஷப் பந்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 9 ஆண்டுகளாக ஆர்சிபியை துரத்தும் சோகம்! பெங்களூருவில் கொடி பறக்கவிடும் கேகேஆர்


ஐபிஎல் நடத்தை விதிகளின்படி குறைந்தபட்ச ஓவர் ரேட்டில் பவுலிங் செய்தால் அபராதம்  விதிக்கப்படும். இந்த சீசனில் டெல்லி அணி முதல் குற்றமாக இவ்வாறு பந்து வீசியதால் பந்திற்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.  இந்த சீசனில் மெதுவான ஓவர் வீதத்தை கடைபிடித்தால் அபராதம் விதிக்கப்பட்ட இரண்டாவது கேப்டன் இவர் ஆனார். இதற்கு முன்பு கடந்த செவ்வாய் கிழமை சென்னை சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 போட்டியின் போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில்லுக்கும் இதேபோன்ற குற்றத்திற்காக 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


கடந்த டிசம்பரில் 2022ல் நடந்த கார் விபத்தில் இருந்து உயிர்பிழைத்த பந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு ஐபிஎல் 2024 போட்டிகளில் விளையாடி வருகிறார்.  இவரது வருகையை பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். மேலும் விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறார். இந்த சீசனில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்துள்ளார் பந்த். சென்னை அணிக்கு எதிராக ​​பந்த் 32 பந்துகளில் 51 ரன்கள் அடித்து அசத்தினார்.  டெல்லி அணிக்கு பிருத்வி ஷா மற்றும் வார்னர் நல்ல தொடக்கம் கொடுத்த போதிலும் கடைசி சில ஓவர்களில் பந்த் சிறப்பாக விளையாடி டெல்லி கேபிடல்ஸ் 192 என்ற இலக்கை வைக்க உதவினார். 


சென்னை அணியின் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க தடுமாறினார். கேப்டன் ருத்ராஜ் மற்றும் ரச்சின் ரவீந்திரா சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க ​​அஜிங்க்யா ரஹானே 30 பந்துகளில் 45 ரன்கள் அடித்து அசத்தினார். இருப்பினும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க சிரமப்பட்டனர். டேரி மிட்சல் 26 பந்துகளில் 34 ரன்களும், துபே 17 பந்துகளில் 18 ரன்களும் அடிக்க ரன் ரேட் மிகவும் கம்மியானது. கடைசியில் களமிறங்கிய தோனி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  கடைசி வரை ஆட்டமிழக்காமல் 16 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களை உட்பட 37 ரன்கள் அடித்து இருந்தார். இருப்பினும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 171 ரன்கள் மட்டுமே அடித்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  


மேலும் படிக்க | ஆர்சிபி அணியின் தொடர் தோல்விக்கு என்ன காரணம்? ஏலத்தில் அந்த அணி செய்த தவறு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ