Tokyo Olympics 2020: டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு 2021 ஆரம்பிப்பதற்கு முன்பு, டெல்லி அரசு மாநில விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும், தன்னம்பிக்கை அளிக்கவும் ஒரு பெரிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் (Olympic Games Tokyo 2020) பங்கேற்கும் டெல்லியைச் சேர்ந்த வீரர்களுக்கு தங்கப் பதக்கம் வென்றால் ரூ .3 கோடியும், வெள்ளிப் பதக்கம் வென்றால் ரூ .2 கோடியும், வெண்கலப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ .1 கோடியும் வழங்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனுடன், பதக்கம் வெல்லும் வீரர்களின் பயிற்சியாளருக்கும் ரூ .10 லட்சம் வழங்கப்படும். டெல்லியில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கொள்ளும் வீரர்களில் மணிகா பத்ரா, தீபக் குமார், அமோஸ் ஜேக்கப், சர்தக் பாம்ப்ரி ஆகியோர் அடங்குவர்.


கேல் ரத்னா விருது (Khel Ratna awarde) பெற்ற மாணிக்க பத்ரா டேபிள் டென்னிஸில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவார். ரைஃபிள் பிரிவில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார். அவர் 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கி சூடு போட்டியில் பங்கேற்பார். டெல்லியின் குரு தேக் பகதூர் கல்சா கல்லூரியின் மாணவர் அமோஸ் ஜேக்கப் 4×400 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்பார். அதேபோல டெல்லியைச் சேர்ந்த சர்தக் பாம்ப்ரி 4×400மீ ரிலே ஒலிம்பிக்கில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.


ALSO READ | Olympic Games: பி.டி. உஷாவின் சாதனைகள்


வருங்கால ஒலிம்பிக் சாம்பியங்களை (Olympic champion) உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், உலகத் தரம் வாய்ந்த விளையாட்டுப் பல்கலைக்கழகத்தைக் கட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் உறுதி செய்து வருவதாகவும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா (Deputy Chief Minister Manish Sisodia) தெரிவித்தார். ஒலிம்பிக் போட்டிகளில் நாட்டிற்காக பதக்கங்களை வெல்லும் வீரர்களை உருவாக்குவதற்கு டெல்லி விளையாட்டு பல்கலைக்கழகம் செயல்படும்.


இந்த விளையாட்டு பல்கலைக்கழகம் மூலம் டெல்லிஒரு விளையாட்டு மையமாக உருவாகும். விளையாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு, டெல்லி முழுவதும் சமூக விளையாட்டு மூலம் விளையாட்டு நிகழ்வுகளை நடந்த பல்கலைக்கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்படும். இதனால் டெல்லி மற்றும் நாடு முழுவதும் விளையாட்டுக்கான சூழல் உருவாக்கப்படுகிறது. இதனால் 2048 ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஹோஸ்டிங்கை டெல்லியில் நடத்த கோரலாம்.


டெல்லி விளையாட்டுப் பல்கலைக்கழகம் (Delhi Sports University) கீழ் டெல்லி விளையாட்டுப் பள்ளியும் நிறுவப்படுகிறது. டெல்லி விளையாட்டுப் பள்ளியில் சேர்க்கை அடுத்த அமர்வில் இருந்து தொடங்கும். மாணவர்களின் திறன்கள் மற்றும் நலன்களுக்கு ஏற்ப, அவர்களுக்கு விளையாட்டு தேர்வு செய்யப்படும், அவர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்படும் என்றார். 


ALSO READ | Olympics: நாகநாதன் பாண்டி - கட்டுமானத் தொழிலாளர் முதல் ஒலிம்பிக் வீரர் வரை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR