வார்னரின் அதிரடியால் பஞ்சாப் அணியை பந்தாடியது டெல்லி அணி
வார்னரின் அதிரடியால் டெல்லி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.
ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜிதேஷ் சர்மா 23 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.
மேலும் படிக்க | சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் பொல்லார்டு
கேப்டன் மயங்க் அகர்வால் 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் அந்த அணி மிகப் பெரிய ஸ்கோர் எடுக்க முடியவில்லை. டெல்லி அணியைப் பொறுத்தவரை மிக மிக எளிதான இலக்காக இருந்தது. பின்னர் இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய பிருத்திவ ஷா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.
பிரித்திவி ஷா 20 பந்துகளில் 46 ரன்களும், டேவிட் வார்னர் 30 பந்துகளில் 60 ரன்களும் குவித்தனர். இதனால் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த டெல்லி அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், புள்ளிப் பட்டியலிலும் 5வது இடத்துக்கு முன்னேறியது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் படிக்க | டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR