சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் பொல்லார்டு

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கைரன் பொல்லார்டு அறிவித்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 20, 2022, 10:42 PM IST
  • சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பொல்லார்டு ஓய்வு
  • திடீரென ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் பொல்லார்டு
  • இந்த அறிவிப்பால் வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் அதிர்ச்சி
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் பொல்லார்டு title=

வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரரான கைரன் பொல்லாடு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய ஓய்வு முடிவை வெளியிட்டுள்ளார். அதில், கவனமான ஆலோசனைக்குப் பிறகு ஓய்வு முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ள அவர், 10 வயது சிறுவனாக இருந்தபோதே வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட வேண்டும் என எண்ணியதாக கூறியுள்ளார். மற்ற இளைஞர்களைப் போல் தான் கனவு கண்டதோடு மட்டுமல்லாமல், வெஸ்ட் இண்டீஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியதில் மகிழ்ச்சி கொள்வதாகவும் பொல்லார்டு தெரிவித்துள்ளார். 

"2007 ஆம் ஆண்டு எனது சிறுவயது ஹீரோ பிரையன் லாராவின் தலைமையில் நான் சர்வதேச அரங்கில் அறிமுகமானதை இன்னும்  நினைவில் வைத்திருக்கிறேன். அந்த மெரூன் நிறங்களை அணிந்து, அத்தகைய ஜாம்பவான்களுடன் இணைந்து விளையாடியது, எனக்கு கிடைத்த பாக்கியம். பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா

பொல்லார்ட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 123 ஒருநாள் போட்டிகளிலும், 101 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதன்முதலாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச போட்டியில் களமிறங்கினார். அடுத்த ஆண்டில் பிரிட்ஜ்டவுனில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக T20 போட்டியில் களம் கண்டார். டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத அவர், வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெள்ளைப் பந்துக்கான அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்திருந்தார்.

2014 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சர்வதேச போட்டியில் இருந்து விலகிய அவர், 2016 ஆம் ஆண்டு மீண்டும் அணிக்கு திரும்பினார். 2019 ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் 61 போட்டிகளில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 25 போட்டிகளில் வெற்றியும், 31 போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது. 

மேலும் படிக்க | சிஎஸ்கே வீரருக்கு திருமணம் - வேட்டி சட்டையுடன் கொண்டாடிய தோனி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News