கனவுக்காக ஒரு நாட்டையே விட்டு வெளியேறி இன்னொரு நாட்டில் வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்று கூட தெரியாமல், அங்கு தஞ்சமடைந்து பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு ஒருவர் தன் கனவை அடைகிறார் என்றால், இதனை சாதனை என்று கூறாமல் வேறு எதை சாதனை என அடையாளப்படுத்துவது. அந்த சாதனைக்கு சொந்தக்காரர் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே தான். உலக கோப்பை 2023 முதல் லீக் போட்டி தான் அவருடைய உலக கோப்பை கிரிக்கெட்டின் முதல் போட்டியும் கூட. நியூசிலாந்து அணிக்காக 33 வயதில் உலக கோப்பையில் களமிறங்கியிருக்கும் அவர், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை எளிதாக வீழ்த்துவதில் பெரும் தூணாக நின்றிருக்கிறார் கான்வே. அதுவும் சேஸிங்கில். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Ind vs Aus: இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு! சுப்மன் கில் விளையாடமாட்டார்!


 இங்கிலாந்து அணியின் வலிமையான வேகப்பந்துவீச்சு தாக்குதலை எதிர்கொண்டு 150 ரன்களை விளாசி, கருப்பு பூனை படை என்று செல்லமாக அழைக்கப்படும் நியூசிலாந்து அணியை வெற்றி பெற வைத்திருக்கும் டெவோன் கான்வேவின் கிரிக்கெட் பயணம் சாதாரணமானது அல்ல. பல தடைகளையும்,  முள் பாதைகளையும் கடந்து வந்திருக்கிறது. டெவோன் கான்வே பிறந்தது தென்னாப்பிரிக்காவில். சிறுவயது முதல் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட அவர் தென்னாப்பிரிக்காவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த சமயம். ஆனால் அவருடைய திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கான்வேக்கு அங்கு கிடைக்கவில்லை. 26 வயது வரை ஓப்பனிங் பேட்ஸ்மேன், மிடில் ஆர்டர் மற்றும்  பினிஷர் என்ற இடத்திலும் விளையாடி இருக்கிறார்.


ஆனால், தன்னுடைய கிரிக்கெட்டுக்கு அங்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று உணர்ந்தவுடன் வேறு நாட்டுக்கு இடம்பெற முடிவு செய்கிறார் அவர். ஈஸியாக இங்கிலாந்துக்கு சென்று அந்த அணியில் இடம் பிடித்திருக்க முடியும். ஏற்கனவே பல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்துக்கு சென்று அந்நாட்டு கிரிக்கெட் அணியிலும் இடம்பிடித்து விளையாடிய வரலாறு இருக்கிறது. டெவோன் கான்வேவும் இங்கிலாந்தில் பல சீசன்கள் உள்ளூர் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். ஆனால் டெவோன் கான்வே அதனை செய்யவில்லை. அவருக்கு நியூசிலாந்தில் நண்பர்கள் அதிகமாக இருந்ததால் அந்நாட்டுக்கு செல்ல முடிவு செய்தார். 


தென்னாப்பிரிக்காவில் இருந்த அனைத்து சொத்துகளையும் விற்று நியூசிலாந்தில் குடியேறிய டெவோன் கான்வே, அந்நாட்டு பள்ளியில் பயிற்சியாளராக பணியில் சேர்கிறார். கிரிக்கெட் கிளப் ஒன்றையும் வைத்து தினமும் 6 முதல் 7 மணிநேரம் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடுகிறார். இதன் தொடர்ச்சியாக நியூசிலாந்து அணியின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று 6 தொடர்களில் 5 தொடர்களில் மிகச்சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்டெவோன் கான்வே.


அதன்பிறகு நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு தேடிச் செல்ல, அப்போது உலக கோப்பையில் அந்த அணிக்கு சிறப்பாக விளையாடி பெரும் சேர்த்திருக்கிறார் அவர். அதிக வயதில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி சதம் அடித்தவர் என்ற பட்டியலிலும் டெவோன் கான்வே இடம்பிடித்ததுள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்எஸ் தோனி தலைமையில் அவர் விளையாடிக் கொண்டிருப்பதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்று.  


மேலும் படிக்க - Asian Games 2023: வரலாறு படைத்த இந்தியா! இதுவரை இல்லாத அளவுக்கு பதக்க எண்ணிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ