நெடுநாள் ஏமாற்றத்திற்கு பின்னர், 10000 ரன்கள் குவித்தார் தோனி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னியில் நடைப்பெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 10000-வது ரன்னை எட்டினார்.
முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் (Asia XI அணிக்காக விளையாடி 174 ரன்கள் குவித்தது உள்பட) 10000 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இதனையடுத்து நடைப்பெற்ற போட்டிகளில் ஆசிய ஆணி ரன்கள் இல்லாமல் 10000 ரன்களை எட்டாமல் ரசிகர்களை ஏமாற்றி வந்தார். இந்நிலையில் இன்று நடைப்பெற்று வரும் ஒருநாள் போட்டியில் இந்த சாதனையினை எட்டியுள்ளார்.
இன்று தோனி படைத்த சாதனை மூலம், ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள் குவித்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையினை படைத்துள்ளார். இவருக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், கங்குளி, ராகுல் டிராவிட், விராட் கோலி ஆகியோர் 10,000 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளனர்.
10,000 ரன்கள் குவித்த இந்திய வீரர்கள்...
சச்சின் டெண்டுல்கர் - 18,426
கங்குளி - 11, 221
ராகுல் டிராவிட் - 10,768
விராட் கோலி - 10,232
உலக அணி அளவில் பார்த்தால் இலங்கை விக்கெட் கீப்பர் சங்கரகாரா-வினை தொடர்ந்து 10,000 ரன்கள் குவித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் என்ற பெருமையினை தோனி படைத்துள்ளார்.
இன்று சாதனை படைத்துள்ள தோனி, இந்த இலக்கை எட்டுவதற்காக 9 சதங்கள், 67 அரை சதங்கள் உதவிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது!