இந்திய அணிக்கு ராசியான கேப்டன் என்ற லிஸ்டில் முதல் இடத்தில் இருக்கும் தோனி (Dhoni), அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார். இன்னும், ஐ.பி.எல் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் அவர், 2006 ஆம் ஆண்டே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற நினைத்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | IPL 2023: தோனியின் சரவெடி.. சேப்பாக்கத்தில் தொலைந்த பந்துகள்..! சம்பவம் இருக்கு


2005 ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருந்த தோனி, இலங்கை அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். அதற்கடுத்தபடியாக, இந்திய அணியின் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்திலும் இடம்பிடித்தார். பைசலாபாத் டெஸ்ட் போட்டியில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய தோனி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தோனிக்கு பக்கபலமாக டிராவிட் களத்தில் இருந்தார். 


அந்தப் போட்டியில் இருவரும் சதமடித்து, பாகிஸ்தான் அணிக்கு 603 என்ற மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்தனர். டிராவிட் 103 ரன்கள் எடுத்திருக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய தோனி 153 பந்துகளில் 148 ரன்களை விளாசினார். அது அவருடைய முதல் சர்வதேச டெஸ்ட் சதமாகும். இதனால் மகிழ்ச்சியில் உச்சத்துக்கு சென்ற தோனி, டிரஸ்ஸிங் ரூமில் மிகவும் சத்தமாக ’நானும் டெஸ்ட் போட்டியில் சதமடித்துவிட்டேன் என்ற வரலாறு எழுத்தப்பட்டுவிட்டது. இதுபோதும் எனக்கு. இன்றோடு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போகிறேன் என அறிவிக்கிறேன்’ என மகிழ்ச்சியாக கூறியுள்ளார். இந்த தகவலை அப்போது அவருடன் அணியில் விளையாடிக் கொண்டிருந்த விவி.எஸ். லக்ஷ்மன் பகிர்ந்து கொண்டுள்ளார். 


மேலும் படிக்க | IPL 2023: சிஎஸ்கே துருப்புச்சீட்டு இவர் தான்: ஹர்பஜன் சிங் கணிப்பு


கும்பிளேவுக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்ஷிப் பொறுப்பை தோனி ஏற்றார். 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் கிடைத்த வெற்றிகள்போல் தோனி தலைமையிலான இந்திய அணிக்கு டெஸ்டில் கிடைக்கவில்லை. இதனால், கடும் விமர்சனத்தை எதிர்கொண்ட அவர், 2014 ஆம் ஆண்டு திடீரென டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். குறுகிய வடிவிலான போட்டிகளில் இந்திய அணியை தலைச்சிறந்த உயரத்துக்கு எடுத்துச் சென்ற அவரால், டெஸ்ட் போட்டியில் அவ்வாறு சோபிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்ததாகவும் பேட்டிகளில் பதிவு செய்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR


Telegram Link: https://t.me/ZeeNewsTamil