தோனியை கம்பு எடுத்து துரத்திய ரசிகர்கள்! என்ன ஆச்சு?
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கிரிக்கெட் வாழ்க்கையில் தான் எதிர்கொண்ட சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைச்சிறந்த கேப்டனாக இருந்த தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஐ.பி.எல் போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் அவர், தனக்கு நேர்ந்த சுவாரஸ்யமான அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது, தோனி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களை ரசிகர்கள் கம்பு எடுத்து துரத்தியதுடன், அவர்களின் வீடுகளையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | IPL 2023: தோனியின் சரவெடி.. சேப்பாக்கத்தில் தொலைந்த பந்துகள்..! சம்பவம் இருக்கு
2007 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறியது. அந்த தொடரில் வங்கதேசம் அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வியை தழுவி அதிர்ச்சியளித்தது. தோனி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இலங்கை அணியுடனான அடுத்தப்போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால், கடுப்பான இந்திய ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். தோனி உள்ளிட்டோரின் வீடுகளை முற்றுகையிட்டு கற்களையும் வீசினர். இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ள தோனி, " அந்த அனுபவம் எனக்கு உண்மையிலேயே எனக்கு வித்தியாசமாக இருந்தது. தோல்வியடைந்த பிறகு ஒட்டுமொத்த அணியினரும் டெல்லி விமான நிலையம் வந்தோம்.
அங்கு காவல்துறையினர் ரெடியாக இருந்தனர். விமான நிலையத்துக்கு வெளியே மீடியாக்களும், ரசிகர்களின் கூட்டமும் அதிகமாக இருந்தது. அவர்களின் கண்களில் கடும் கோபம் இருப்பதை பார்த்தேன். காவல்துறையினர் எங்களை உடனடியாக அவர்களின் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அப்போது மீடியாக்கள் எங்களை துரத்திக்கொண்டே வந்தனர். அவர்கள் எங்களை சேஸ் செய்யும்போது, நாம் என்ன தீவிரவாதியா? அல்லது கொலை ஏதேனும் செய்துவிட்டோமா? என்றெல்லாம் யோசித்தேன். வீட்டிற்கு செல்லும்போது கம்பு, கற்களையெல்லாம் எடுத்துக் கொண்டு ரசிகர்கள் துரத்தினார்கள். பின்னர், அவர்கள் வீட்டை முற்றுகையிட்டார்கள். இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அதில் இருந்து தான் வெறுப்பை எப்படி கையாள வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். எனக்கு ஒரு பக்குவம் கிடைத்தது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | IPL 2023: சிஎஸ்கே துருப்புச்சீட்டு இவர் தான்: ஹர்பஜன் சிங் கணிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR