இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனான தோனி 41 வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கானோர் பிறந்தநாள் வாழ்த்துகளை அனுப்பி வருகின்றனர். இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானது முதல் விடைபெற்றது வரை என தோனி செய்த சாதனைகளையும் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் 2008 ஆம் ஆண்டு தோனி ஆஸ்திரேலியாவில் செய்த சம்பவம் ஒன்று இப்போது தெரிய வந்திருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | எம்எஸ் தோனியை என்றும் மறக்க முடியாத 5 தருணங்கள்!


2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்த இந்திய அணி, காமன்வெல்த் பேங்க் சீரிஸில் பங்கேற்றது. தோனி இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று இருந்த ஆரம்ப கட்டம். பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மிக வலுவாக இருந்தது. உலக கிரிக்கெட்டில் அவர்கள் கோலோச்சிக் கொண்டிருந்தனர். அவர்களை வீழ்த்தவே முடியாது என்ற மனநிலை பொதுவாக இருந்தது. 



காமன்வெல்த் பேங்க் சீரிஸ் மேட்ச் மெர்ல்பேர்ன் மைதானத்தில் நடக்கிறது. தோனியும், ரோகித் சர்மாவும் களத்தில் இருக்கின்றனர். 10 ரன்கள் எடுத்தால் இந்திய அணி வெற்றி என்ற நிலையில் மேட்ச் பரபரப்பாக இருக்கிறது. களத்தில் இருந்த தோனி திடீரென கிளவுஸ் வேண்டும் என பெவிலியன் நோக்கி சைகை செய்கிறார். வழக்கமாக மேட்ச் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும்போது, கிளவுஸ் கேட்டால் பெவிலியனில் இருந்து ஏதாவது மெசேஜ் கேட்பதற்காக அப்படி செய்வார்கள். ஆனால் தோனி அங்கு செய்தது வேறு. இன்னும் 10 ரன்கள் தான் இருக்கிறது. நாம் வெற்றி பெற்றுவிடுவோம். அப்போது, பெவிலியனில் யாரும் அதனை கொண்டாட வேண்டாம் என மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.


அதேசமயம் களத்தில் இருந்த ரோகிச் சர்மாவிடம், வெற்றி பெற்றபிறகு வாழ்த்து கூறும்போது அவர்களின் கைகளை இறுக்கமாக பற்றி ஷேக் செய்யுங்கள், கடமைக்கு செய்யாதீர்கள் என கூறியிருக்கிறார். அதாவது, வீழ்த்தவே முடியாது என்ற அணியெல்லாம் ஆஸ்திரேலியா அல்ல, நீங்களும் மற்ற அணிகளைப் போல் சாதாரணமான அணி தான் என்பதை பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு வீழ்த்தவே இப்படி செய்தாராம். அந்த தொடருக்குப் பிறகும் தோனி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியதுடன் வரிசையாக தொடர்களை வென்று அசத்தியது. இந்த சுவாரஸ்யமான செய்தியை பிரபல கிரிகெட் செய்தியாளர் ஒருவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார். 


மேலும் படிக்க | ஓவ்வொரு நாட்டிலும் ஒருநாள் போட்டியில் தோனி அடித்த ரன்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR