கிராமத்துக்கு விசிட் அடித்த தோனி - சிறுமிகளுக்கு கொடுத்த சர்பிரைஸ்
ராஞ்சியில் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பிய கிராமத்து சிறுமிகளின் ஆசையை தோனி நிறைவேற்றி வைத்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இப்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். ஐபிஎல் போட்டி முடிந்தவுடன் ராஞ்சிக்கு சென்ற அவர், தன்னுடைய சொந்த வயல் மற்றும் பண்ணை வீட்டில் விவசாய பணிகளை கவனித்துக் கொள்கிறார். ஆசை ஆசையாய் வளர்த்து வரும் குதிரை மற்றும் நாய்களுடன் ஜாலியாக விளையாடும் தோனி, அவ்வப்போது அருகில் இருக்கும் இடங்களுக்கு விசிட் அடிக்கிறார்.
மேலும் படிக்க | இந்திய அணிக்கு மேலும் அடி! இரண்டு புள்ளிகளை குறைத்த ஐசிசி!
கடை திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வரும்போதும், அதில் தேர்ந்தெடுத்து சில நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொள்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஞ்சியில் இருந்து லாப்பங் சென்றிருக்கிறார். அந்த சாலை அடர்ந்த வனப்பகுதி வழியே செல்லக்கூடிய சாலை. அதில் தோனி மற்றும் அவரது பாதுகாப்பாளர் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். கிராமத்தில் இருக்கும் குறுகலான சாலை என்பதால் தோனியின் வாகனம் மெதுவாக சென்றுள்ளது.
அப்போது அங்கு நடந்து சென்று கொண்டிருந்த சிறுமிகள் இருவரும் தோனியை அடையாளம் கண்டு மகிழ்ச்சியில் குதித்துள்ளனர். மேலும், நொடிப்பொழுதில் புகைப்படம் எடுத்துக்கொள்ள விருப்பமும் தெரிவித்துள்ளனர். அவர்களின் மகிழ்ச்சியை கண்ட தோனி, உடனடியாக காரை நிறுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். ஒரு புகைப்படத்தில் தோனியே செல்பி எடுத்திருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியிருக்கின்றன. லட்சக்கணக்கானோர் தோனியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள காத்திருக்கும் நிலையில், தோனியுடன் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு சிறுமிகளுக்கு கிடைத்திருப்பது அதிர்ஷ்டம் தான் என நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க | இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸின் பேராசை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR