இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸின் பேராசை

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்பதே இங்கிலாந்து அணியின் இலக்கு என பென்ஸ்டோக்ஸ் கூறியிருக்கிறார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 6, 2022, 10:04 AM IST
  • இங்கிலாந்து அணியின் புதிய யுக்தி
  • சேஸிங் செய்வது எங்களுடைய இலக்கு
  • இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸின் பேராசை title=

இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. வரிசையாக டெஸ்ட் போட்டிகளில் சேஸிங் செய்து வெற்றி பெற முடியும் என நிரூபித்துக் கொண்டே வருகின்றனர். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேஸிங் செய்து அசத்திய இங்கிலாந்து அணி, அதே ஃபார்முலாவை இந்திய அணியிடமும் கடைபிடித்தது. டாஸ் வென்ற பென்ஸ்டோக்ஸ் இதற்காக பந்து வீச்சையே தேர்வு செய்தார். டெஸ்ட் போட்டியை சேஸிங் செய்து வெற்றி பெற வேண்டும் என்பதே தன்னுடைய இலக்கு என்றும் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். 

மேலும் படிக்க | இந்திய அணிக்கு மேலும் அடி! இரண்டு புள்ளிகளை குறைத்த ஐசிசி!

இனி வரும் காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றை இங்கிலாந்து அணி மாற்றும் என சூளுரைத்துள்ளார். அவருடைய சொல்வதுபோலவே எட்ஜ்பஸ்டனில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து இணி செய்து காட்டியது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 378 ரன்களை சேஸ் செய்வது சாதாரண விஷயமல்ல. இவ்வளவு நாள் அப்படி தான் பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரலாற்றைத் தான் மாற்ற வேண்டும் என விரும்புகிறார் பென்ஸ்டோக்ஸ். 

அதற்கான தொடக்க புள்ளியை நியூசிலாந்து தொடரில் தொடங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிரான போட்டியிலும் நிரூபித்துக் காட்டியது. "இங்கிலாந்து அணி எப்படி டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுகிறது என்பதை அனைவரும் பார்க்கத் தொடங்கிவிட்டனர். எங்களைப் பார்த்து பயம் கொள்கிறார்கள். மூன்றாவது இன்னிங்ஸ் விளையாடும் அவர்கள் தான் எங்களைப் பற்றி பயப்பட வேண்டியிருக்கிறது. அந்த பயம் தான் எங்களுக்கான வாய்ப்பு. நாங்கள் சரியான திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். டெஸ்ட் போட்டிகளில் நான்காவது பேட்டிங் செய்வதை மகிழ்ச்சியாக பார்க்கிறோம். 

இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டை மாற்றி அமைக்க முயற்சி செய்கிறோம். கடந்த நான்கு ஐந்து வாரங்களாக இதில் கவனம் செலுத்தி வருகிறோம். ரசிகர்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பும் வியக்க வைக்கிறது. இதே புத்துணர்ச்சியோடு அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவோம்" என பென் ஸ்டோக்ஸ் மகிழ்ச்சியோடு கூறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டை மாற்ற பேராசையோடு பயணிக்கும் பென் ஸ்டோக்ஸூக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.  

மேலும் படிக்க | ஜடேஜா போட்ட நங்கூரம்! முதல் சதம் அடித்து அசத்தல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News