இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஆறாவது ஒருநாள் போட்டி இன்று செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைப்பெறுகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.


6 ஒருநாள் கொண்ட ஒருநாள் தொடரில், ஐந்து போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. இந்த தொடரை வென்றதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்கா மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி சரித்திரம் படைத்தது கோலி தலைமையிலான இந்திய அணி.


முன்னால் கேப்டன் எம்.எஸ்.தோனி, தனது ஒரு நாள் போட்டியில் 10,000 ரன்களை கடக்க உள்ளார். அவர் இந்த சாதனை செய்ய 33 ரன்கள் மட்டுமே தூரம். இன்றைய போட்டியில் 10,000 ரன்களை கடந்தார் என்றால் சர்வதேச ஒருநாள் போட்டியில் பத்தாயிரம் ரன்களை கடக்கும் 12 வீரர் ஆவார். இந்தியாவில் நான்காவது வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன்னதாக சச்சின், கங்குலி, டிராவிட் போன்ற வீரர்கள் பத்தாயிரம் ரன்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.