ஐபிஎல் 2022 தொடரின் 49 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் தோனி, இப்போட்டியில் செய்த சில தவறுகள் தான் சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


தோனி செய்த தவறு


பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. கேப்டனான தோனி இப்போட்டியில் சாம்ப்யன் பிளேயரான பிரோவோவை ஆடும் லெவனில் எடுக்காமல் வெளியே உட்கார வைத்தார். பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடும் சிறந்த ஆல்ரவுண்டரான அவரை, தோனி ஏன் வெளியே உட்கார வைத்தார் என தெரியவில்லை. 


மேலும் படிக்க | எதற்காக பேட்டிங் தேர்வு?... ஹர்திக் பாண்டியாவின் விளக்கம்


சிறப்பாக விளையாடும் பிராவோ


ஐபிஎல் 20220ல் பிராவோ சிறப்பாக விளையாடி வருகிறார். சிஎஸ்கே அணிக்காக இந்த சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியவர். இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பிராவோவின் பேட்டிங் திறமையைப் பற்றி அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சிறப்பாக விளையாடும் அவர், பினிஷிங் செய்யவதில் கில்லாடி. அவர் இருந்திருந்தால் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி சேஸிங் செய்திருக்க வாய்ப்புகள் உண்டு. 



தோனியின் தொடர் சொதப்பல்


கடந்த சில  சீசன்களாக தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வரும் தோனி, இந்த ஆண்டும் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. ஒரே ஒரு போட்டியில் மட்டும் சென்னை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற அவர், அடுத்தடுத்தப் போட்டிகளில் வெற்றி பெற வைக்க வேண்டிய நேரத்தில் அவுட்டாகி வெளியேறினார். கேப்டனாக இருந்த ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சொதப்பி வருகிறார். இருவரும் பழைய ஃபார்முக்கு திரும்பினால் மட்டுமே சென்னை அணி, எஞ்சிய ஆட்டங்களில் வெற்றிப் பாதைக்கு திரும்ப வாய்ப்புள்ளது. 


மேலும் படிக்க | மதம்மாற கட்டாயப்படுத்தியதாக ஷாகித் அப்ரிடி மீது சரமாரி குற்றச்சாட்டு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR