சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை பற்றிய விவாதத்தில் சில ஆண்டுகளாக அதிகமாக பேசப்படுவது வீரர்களின் பணிச்சுமை.  சந்தேகத்துக்கு இடம் இன்றி கடந்த 20 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகள் அதிகமாகவே நடத்தப்படுகிறது.  குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பினால் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் முடங்கியது.  ஊரடங்கு காரணமாக பல நாடுகளும் கிரிக்கெட் போட்டிகளை தள்ளிவைத்தனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ டிராவிட் தலைமையில் சாதித்துக் காட்டிய இந்திய அணி!


மற்ற வேலைகளை போலவே விளையாட்டுப் போட்டிகளிலும் வீரர்களுக்கு பணிச்சுமை என்பது உள்ளது.  உலகில் உள்ள மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்களை ஒப்பிடும்போது இந்திய கிரிக்கெட் வீரர்களின் பணிச்சுமை மிக அதிகமாக உள்ளது.  வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்துவது, அவர்களுக்கு ஓய்வு அளிப்பது, சில வீரர்களை குறிப்பிட்ட போட்டிகளுக்கு பயன்படுத்துவது, அடுத்தகட்ட வீரர்களை தயார்படுத்துவது என இவை அனைத்திலும் கிரிக்கெட் வாரியம் மிகவும் முக்கியமாக அணுக வேண்டியுள்ளது. 



தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இருந்து விராட் கோலி தாமாகவே ஓய்வு எடுத்துக் கொண்டு உள்ளார். சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக அனைத்துவித போட்டிகளிலும் விராட் கோலி இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.  உலக கோப்பை பைனல் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு உடனடியாக நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.  இந்த போட்டியில் இருந்து கேன் வில்லியம்சன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.  இந்த கோவிட் தொற்று காலத்தில் வீரர்களின் மன வலிமையையும் அதிகமாக கவனிக்க வேண்டியுள்ளது.  உடலுக்கு எவ்வாறு ஓய்வு தேவைப்படுகிறதோ அதேபோல மனதளவிலும் வீரர்களுக்கு ஓய்வு என்பது மிக முக்கியமான ஒன்று.  



வெளியிலிருந்து பார்ப்பதற்கு அனைத்து வீரர்களும் மகிழ்ச்சியாக இருப்பது போல் தெரிந்தாலும், தற்போது உள்ள தனிமைபடுத்தல் (bio-bubble) மிகவும் கொடுமையான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.  போட்டியில் விளையாடும் போது மட்டுமே பணிச்சுமை வருவதில்லை அவர்கள் வீட்டிலிருந்து கிளம்பும்போது அவை ஆரம்பித்துவிடுகிறது.  இந்திய கிரிக்கெட் வீரர்கள், ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிவிட்டு, அடுத்த ஒரு வாரத்தில் உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்றனர்.  இந்திய அணி இந்த வருட உலகக் கோப்பை போட்டியில் அரை இறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.  


2018 ஜனவரி 1ம் தேதியிலிருந்து நவம்பர் 14, 2021 வரை இந்திய அணி விளையாடிய போட்டிகளை பார்ப்போம்.  மொத்தமாக 46 மாதங்கள் 14 நாட்களில் இந்திய அணி 37 டெஸ்ட் போட்டிகள், 63 ஒருநாள் போட்டி மற்றும் 59 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது.  மொத்தமாக 159 இன்டர்நேஷனல் கிரிக்கெட்டில் விளையாடி உள்ளது.  இதே காலகட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 27 டெஸ்ட், 52 ஒருநாள் போட்டி மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது.  மொத்தமாக 137 இன்டர்நேஷனல் கிரிக்கெட் விளையாடி உள்ளது.  வெளியிலிருந்து பார்ப்பதற்கு இது சாதாரணமாக தெரிந்தாலும் வீரர்களின் பக்கம் இருந்து பார்க்கும்போது இது மிகப்பெரிய மன அழுத்தம் ஆகவே காணப்படுகிறது.


ALSO READ நீங்கள் இன்னும் பல சீசன்களுக்கு CSK-ஐ வழிநடத்த விரும்புகிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR