இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தோற்றாலும் இந்த 3 விஷயம் பாசிடிவ் - தினேஷ் கார்த்திக்
Dinesh Karthik : இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்தாலும் முக்கியமான மூன்று விஷயங்கள் பாசிடிவ் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
Dinesh Karthik : இந்திய கிரிக்கெட் அணி இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்திருக்கும் நிலையில், அதிலும் மூன்று பாசிட்டிவான அம்சங்களை சுட்டிக்காட்டியிருக்கிறார் தினேஷ் கார்த்திக். அண்மையில் இலங்கை சுற்றுப் பயணம் சென்றிருந்த இந்திய கிரிக்கெட் அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் டி20 தொடரை கைப்பற்றிய நிலையில், ஒருநாள் போட்டி தொடரை ரோகித் சர்மா தலைமையில் இழந்தது. இத்தனைக்கும் இலங்கை அணியில் பல முன்னணி வீரர்கள் விளையாடவில்லை. அந்த சூழலிலும் இலங்கை கிரிக்கெட் அணி இந்திய கிரிக்கெட் அணியை வீழ்த்தி பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
ஒரு போட்டியில் தோற்கடித்திருந்தால் கூட ஏதோ அதிர்ஷ்டம் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால், அந்த அணி இந்திய அணிக்கு எதிராக முதல் போட்டியை டையில் முடித்துடன் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வெற்றியை வசமாக்கியது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2-0 என கைப்பற்றியது. இது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. கேப்டன் ரோகித் சர்மாவை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் ஒழுங்காக விளையாடவில்லை. குறிப்பாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் மோசமான ஆட்டமே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது.
மேலும் படிக்க | ஒருநாள் போட்டிகளே இல்லை! டெஸ்ட், டி20 மட்டும் தான்! என்ன செய்ய போகிறது இந்தியா?
இதுதான் தோல்விக்கு காரணம் என ஒருநாள் போட்டி தொடர் முடிந்ததும் ரோகித் சர்மா வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார். இந்த சூழலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக், இலங்கை தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவினாலும் மூன்று பாசிட்டிவான விஷயங்களை சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த தொடரில் இந்திய அணியில் நிறைய ஆல்ரவுண்டர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதை அடிகோடிட்டிருக்கும் அவர், ரியான் பராக் கிடைத்த வாய்ப்பில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும் கூறியுள்ளார். மேலும் ரோகித் சர்மாவின் பேட்டிங் அற்புதமாக இருந்ததாகவும் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
" இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் ஆகியோர் தொடர்ச்சியாக மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடினார்கள். ஆல்ரவுண்டர்கள் நிறையபேர் இந்திய அணியில் இடம்பிடிப்பது என்பது நல்ல அறிகுறி. அடுத்து ரியான் பராக் தனக்கு கிடைத்த வாய்ப்பில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். மூன்றாவது கேப்டன் ரோகித் சர்மா ஓப்பனிங்கில் மிகவும் சிறப்பாக ஆடினார். அவர் எளிதாக ஆடுவதுபோன்ற ஒரு தோற்றத்தை பவர்பிளேவில் உருவாக்கினார். இவையெல்லாம் இந்திய அணியின் பிளஸ் பாயிண்டுகள்" தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கவுள்ள 360 பிளேயர்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ