இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையின் மூன்றாவது ஆட்டத்தில் அக்டோபர் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெர்த்தில் மோதியது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இப்போட்டியில் தினேஷ் கார்த்திக் கீப்பிங் செய்து கொண்டு இருந்த போது திடீர் முதுகுவலி காரணமாக பெவிலியன் திரும்பினார்.  இதனால் ரிஷப் பந்த் உடனடியாக அவருக்கு பதிலாக கீப்பிங் செய்தார்.  இந்த டி20 உலகக் கோப்பை 2022க்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் இருக்கிறார். ஆனாலும் அவருக்கு இன்னும் விளையாடும் XIல் வாய்ப்பு கிடைக்கவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நியூஸிலாந்து தொடரில் வாய்ப்பு இல்லை! விரக்தியில் பிரித்வி ஷா செய்த செயல்!



தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் காயம் காரணமாக வெளியேற வேண்டியிருந்தது. 15வது ஓவர் தொடங்குவதற்கு முன்பு விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக் காயம் காரணமாக வெளியேறியதால் கடைசி 5 ஓவர்களுக்கு பந்த் கீப்பிங் செய்தார்.  ஐசிசி புதிய விதிகளின்படி விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்பட்டால் மாற்றும் வீரர் கீப்பிங் செய்யலாம்.  இருப்பினும் இந்தியா ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.  2022 டி20 உலகக் கோப்பையில் இது இந்திய அணியின் முதல் தோல்வியாகும். 



தினேஷ் கார்த்திக்கின் காயம் குறித்து பிசிசிஐ இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.  இருப்பினும் அடுத்து பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் கார்த்திக்கு பதிலாக பந்த் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த உலக கோப்பை போட்டியில் கார்த்திக் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை.  இதன் காரணமாக அடுத்த போட்டியில் அவருக்கு பதிலாக ரிஷப் பந்தை களமிறக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறிது. நவம்பர் 2ம் தேதி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.  


மேலும் படிக்க | கோலியின் ஹோட்டல் அறைக்குள் நுழைந்த நபர்! கடுப்பில் விராட் செய்த காரியம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ