ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி: மணிஷ் பாண்டேவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்தியா அணி விராட் கோலி தலைமையில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.
இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்தியாவுடன், பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளும் அங்கம் வகிக்கின்றன. ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேச அணிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் மனிஷ் பாண்டே இடம்பெற்று இருந்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் பாண்டே காயமுற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே காயமடைந்த மனிஷ் பாண்டேவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.