ஐபிஎல் போட்டியில் அதிரடி ஆட்டத்தால் பினிஷர் அவதாரம் எடுத்தார் தினேஷ் கார்த்திக். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான இவர், ஆர்சிபி அணியை இக்கட்டான சூழலில் தூக்கி நிறுத்தினார். இதனால், இந்திய அணிக்கான வாய்ப்பு தேடி வந்தது. 36 வயதான தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு கிட்டதட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பியுள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ஜூன் 9 ஆம் தேதி முதல் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்க இருக்கிறார். இவரின் வருகையால் இளம் இந்திய வீரர்கள் 2 பேரின் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. சஞ்சு சாம்சன்


ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் இந்திய அணிக்குள் இடம்பிடிக்க கடுமையாக முயற்சி செய்து வருகிறார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவருக்கு இந்திய அணி வாய்ப்பு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. கிடைத்த வாய்ப்புகளையும் சாம்சன் வீணடித்ததால் அடுத்தடுத்த வாய்ப்புகளைக் கொடுக்க தேர்வர்கள் தயங்குகின்றனர். இதுவரை இந்திய அணிக்காக 20 ஓவர் போட்டிகளில் 13 ஆட்டங்களில் ஆடியுள்ள அவர், 174 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதேநேரத்தில் இந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி 458 ரன்கள் குவித்தார். 



மேலும் படிக்க | ரசிகர்களுக்கு தினேஷ் கார்த்திக் அனுப்பியுள்ள முக்கிய செய்தி!


2. ஜிதேஷ் சர்மா


பஞ்சாப் கிங்ஸிலிருந்து ஐபிஎல் 2022-ல் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் ஜிதேஷ் ஷர்மா.  விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவரும் இந்திய அணியில் இடம்பிடிக்கும் முனைப்பில் இருந்தார். பெயர் கூட பரிசீலிக்கப்பட்டாலும், தினேஷ் கார்த்திக்கின் வருகையின் காரணமாக அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பு என்பது எட்டாக்கனியாகிவிட்டது. இந்த ஐபிஎல் போட்டியில் 12 போட்டிகளில் விளையாடிய ஜிதேஷ் ஷர்மா, 163 ஸ்டிரைக் ரேட்டுடன் 234 ரன்கள் எடுத்தார்.


இந்திய அணியில் இடம்பிடித்திருந்தாலும் தினேஷ் கார்த்திக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால், ரிஷப் பன்ட் அணியில் உள்ளார். அவருக்கு மாற்றாக களமிறக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதால், களமிறங்குவாரா? இல்லையா? என்பது இப்போதைக்கு ரோகித் சர்மா கையில் தான் இருக்கிறது.  


மேலும் படிக்க | ஐபிஎல் 2022: குஜராத் அணி கோப்பை வென்றதில் மேட்ச் பிக்ஸிங்கா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR