ஐபிஎல் 2022 போட்டிகள் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கியது. கொரோனா பரவல் இந்தியாவில் குறைந்துள்ளதால் 4 மைதானங்களில் மட்டும் லீக் போட்டிகள் நடைபெற்றது. இரண்டு மாதங்களாக நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் ரசிகர்களால் பெரிதும் வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டு ஐபிஎல்-ல் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டதால் குரூப் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு ஐபிஎல் பிளே ஆப் போட்டியில் இருந்து சென்னை மற்றும் மும்பை அணிகள் வெளியேறியது.
Those Title-Winning Smiles!
Captain @hardikpandya7 & Head Coach Ashish Nehra and vice-captain @rashidkhan_19-@DavidMillerSA12 pose for the #IPLSelfie after the @gujarat_titans' maiden IPL triumph.#TATAIPL | #GTvRR pic.twitter.com/upAm1CwSuV
— IndianPremierLeague (@IPL) May 29, 2022
மேலும் படிக்க | ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்பு கண்ணீர் விட்டு அழுத ஜோஸ் பட்லர்
கடும் போட்டிக்கு மத்தியில் ஆர்சிபி, குஜராத், லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்று ஐபிஎல் 2022 பைனல் போட்டி அஹமதாபாத் மைதானத்தில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. பரபரப்பாக நடக்க வேண்டிய பைனல் போட்டி சுவாரஸ்யமற்றதாகவே இருந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 130 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்த டார்கெட்டை குஜராத் அணி எளிதாக சேஸ் செய்து கோப்பையை வென்றது. இந்நிலையில், இந்த போட்டியில் மேட்ச் பிக்ஸிங் நடந்துள்ளதாக ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
.@gujarat_titans winning their maiden IPL Title in their maiden IPL season at the Narendra Modi Stadium, Ahmedabad! @GCAMotera
Stuff that dreams are made o
AIPL pic.twitter.com/qNMtJZHwDv
— IndianPremierLeague (@IPL) May 29, 2022
8 முறை சேசிங் செய்து அதில் 7 முறை வென்றுள்ள குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்ததில் சந்தேகம் இருப்பதாக ராஜஸ்தான் அணி மீது ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்திருந்தால் எளிதாக கோப்பையை வென்று இருக்கலாம், மாறாக முதலில் பேட்டிங் செய்ததால் மோசமான தோல்வியை சந்திக்க நேர்ந்ததாக கூறி வருகின்றனர். தற்போது ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக இந்திய அணி தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. சில முக்கிய வீரர்களுக்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க | ஐபிஎல் 2022 கோப்பையை வென்றது குஜராத் டைட்டன்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR