’எனக்கு என்டுகார்டா?’ இந்திய அணிக்கு திரும்புவேன் என மாஸாக கூறிய வீரர்
இனி இந்திய அணிக்கான வாய்ப்பு அவ்வளவு தான் நினைக்கப்பட்ட இவர், தனது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணிக்கான ரேஸில் நானும் உள்ளேன் என ஐபிஎல் மூலம் நிரூபித்துள்ளார்.
டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 34 பந்துகளில் 66 ரன்களை விளாசிய அவர், 5 பவுண்டரிகள் மற்றும் 5 மெகா சிக்சர்களையும் பறக்கவிட்டார். பெங்களூரு அணி முதலில் களமிறங்கியபோது சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தில் இருந்தது. ஒரு முனையில் அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் அரைசதம் அடித்த உடன் அவுட்டாகி வெளியேறினார்.
மேலும் படிக்க | ஐபிஎல் 2022: வார்னர் மகள் கண்ணீர் விட்டு அழுததற்கான காரணம் இதுதானாம்
அப்போது பெங்களூரு அணி 95 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அந்த நேரத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் டெல்லி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். 160 ரன்கள் மட்டுமே பெங்களூரு எடுக்க வாய்ப்புள்ளது என அனைவரும் கணித்திருந்த நிலையில், அனைவரது எண்ணங்களையும் சுக்குநூறாக உடைத்து பெங்களு அணியை 189 ரன்கள் எடுக்க வைத்தார்.
முஸ்தாஃபிசூரின் ஒரே ஓவரில் மட்டும் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களை பறக்கவிட்டு தினேஷ் கார்த்திக் அமர்க்களப்படுத்தினார். இதனால் பெங்களூரு அணி சவாலான ஸ்கோரை எட்ட முடிந்தது. போட்டிக்குப் பிறகு பேசிய தினேஷ் கார்த்திக், "சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது. என்னால் முடிந்தவற்றை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன்.
எனது இலக்கின் ஒரு பகுதி தான் இந்த ஆட்டம். இந்திய அணியில் இடம்பிடிப்பது என்னுடைய இலக்கு. அதற்காக என்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். ஆர்சிபி கேப்டன் டு பிளெசிஸ் பேசும்போது, " ஆரம்பத்தில் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. ஆனால் மேக்ஸ்வெல் சிறப்பாக விளையாடியதுடன் டெல்லி அணி மீது அழுத்தத்தை அதிகரித்தார். 190 ரன்களை எடுக்க வேண்டும் என்றால் ஒரு சிறப்பான இன்னிங்ஸ் தேவை. அதனை ஷாபாஸ் மற்றும் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செய்தனர். ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்றது மகிழ்ச்சி" எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க |IPL:ஹர்திக் பாண்டியா உடைத்த ஸ்டம்பின் விலை இத்தனை லட்சமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR