sex at Olympics: ஒலிம்பிக் போட்டிகளில் ஆணுறைகள் மற்றும் செக்ஸ் விழிப்புணர்வு
1988 ஒலிம்பிக்கில் இருந்து ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்பது வரலாறு. அப்போது, எச்.ஐ.வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆணுறைகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதன்பிறகு அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் ஆணுறைகள் விநியோகிக்கப்பட்ட வரலாறு இங்கே...
டோக்கியோ ஒலிம்பிக் 2020 இல் 11,000 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். 11,091 விளையாட்டு வீரர்கள் 41 வெவ்வேறு விளையாட்டு மற்றும் 339 போட்டிகளில் கலந்துக் கொள்கின்றனர். இருப்பினும், இரண்டு வாரங்கள் ஒலிம்பிக் கிராமத்தில் இருப்பவர்கள் பாலியல் ரீதியான ஈர்ப்பு ஏற்படாமல் தவிர்க்க முடியுமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. நெருக்கம் இருப்பதற்கான வாய்ப்பைக் கருத்தில் கொண்டு, ஆணுறைகள் அங்கு விநியோகிக்கப்படுகின்றன.
1988 ஒலிம்பிக்கில் இருந்து ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்பது வரலாறு. அப்போது, எச்.ஐ.வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆணுறைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இது அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் பின்பற்றப்பட்டது..
1988 சியோல் ஒலிம்பிக்
1988 சியோல் ஒலிம்பிக்கில் ஆணுறைகளை விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கும் பாரம்பரியம் தொடங்கியது. எச்.ஐ.வி எய்ட்ஸ் நோய்களில் உலகம் ஆபத்தான எழுச்சியைக் கண்ட ஒரு தசாப்தத்தில் நடைபெற்ற போட்டியில் அமைப்பாளர்கள் 8,500 ஆணுறைகளை விநியோகித்தனர். அப்போது, ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள விளையாட்டு வீரர்களின் தங்குமிடங்களின் மாடிகளில் ஆணுறைகள் காணப்பட்டன, இதன் காரணமாக வெளிப்புறங்களில் உடலுறவுக்கு தடை விதிக்கப்பட்டது.
Also Read | ‘உங்களை நினைத்து நாடு பெருமை கொள்கிறது’: பவானி தேவிக்கு பிரதமர் ஆறுதல்
2000 சிட்னி ஒலிம்பிக்
2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டிகளின் போது விளையாட்டு வீரர்கள் உடலுறவு கொள்வதை ஊரறிந்த ரகசியமாக செய்தனர். போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு 70,000 ஆணுறைகளை விநியோகிக்க அமைப்பாளர்கள் திட்டமிட்டனர். ஆனால், கூடுதலாக 20,000 ஆணுறைகளை அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
2002 குளிர்கால ஒலிம்பிக் சால்ட் லேக் சிட்டி
2002 சால்ட் லேக் சிட்டியில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில் 100,000 க்கும் மேற்பட்ட ஆணுறைகள் விளையாட்டு வீரர்களிடையே விநியோகிக்கப்பட்டது. இதற்கு பழமைவாதிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.
2012 லண்டன் ஒலிம்பிக்
2012 லண்டன் ஒலிம்பிக் அனைத்திலும் மிக மோசமானதாக கருதப்படுகிறது. விளையாட்டு வீரர்களுக்கு 150,000 ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டது. ஆனால், விளையாட்டு வீரர்கள் வரத் தொடங்கியபோது கிரைண்டர் (Grindr) என்ற வலைதளம் செயலிழந்தது. அதற்கு காரணம் என்ன தெரியுமா? லண்டனுக்கு வந்த ஓரின சேர்க்கை ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள், தங்களுக்கான துணை அங்கே இருக்கிறார்களா என்று கண்டறிய உள்நுழைந்ததில் வலைதளமே முடங்கிப் போனது. இது அப்பொது மிகவும் வைரலான செய்தி
Also Read | Tokyo Olympics: மீராபாய் சானுவின் வெள்ளி பதக்கம், தங்கமாக மாறுமா?
2016 ரியோ ஒலிம்பிக்
பிரேசில் ஒரு ஒலிம்பிக் சாதனையை முறியடித்தது, விளையாட்டுகளில் அல்ல, 450,000 ஆணுறைகளை விளையாட்டு வீரர்களுக்கு விநியோகித்த சாதனை அது.
2020 டோக்கியோ ஒலிம்பிக்
COVID-19 காலகட்டத்தில் நடைபெறுகிறது டோக்கியோ ஒலிம்பிக். விளையாட்டு வீரர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று ஊக்குவித்தனர். இருந்தாலும், ஒலிம்பிக் கிராமத்தில் தங்கும் விளையாட்டு வீரர்களுக்கு 160,000 ஆணுறைகளை வழங்குவதற்காக அமைப்பாளர்கள் நான்கு ஆணுறை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தனர்.
"ஆணுறைகளை விநியோகிப்பது விளையாட்டு வீரர்களின் கிராமத்தில் பயன்படுத்தப்படுவதற்காக அல்ல, ஆனால் விளையாட்டு வீரர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக (எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ்) தங்கள் சொந்த நாடுகளுக்கு அவற்றை எடுத்து செல்வதற்காக கொடுக்கப்படும்" என்று விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
Also Read | மகளிர் குத்துச் சண்டை போட்டியில் லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு தகுதி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR