Tokyo Olympics: மகளிர் குத்துச் சண்டை போட்டியில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு தகுதி!

இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு தகுதி பெற்றிருக்கிறார். ஜெர்மனியின் அபெட்ஸ் நடைனை எதிர்த்து விளையாடிய லவ்லினா, 3-2 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 27, 2021, 02:51 PM IST
  • இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன்
  • டோக்கியோ ஒலிம்பிக்ஸில் காலிறுதிக்கு தகுதி
  • காலிறுதியில் லவ்லினா வென்றால் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதி
Tokyo Olympics: மகளிர் குத்துச் சண்டை போட்டியில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு தகுதி! title=

இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு தகுதி பெற்றிருக்கிறார். ஜெர்மனியின் அபெட்ஸ் நடைனை எதிர்த்து விளையாடிய லவ்லினா, 3-2 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் லவ்லினா போரொக்கோஹைன் காலிறுதிக் தகுதிப் பெற்றார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று, நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரது பதக்கம், தங்கப் பதக்கமாக மாறுமா என்பது தற்போது தங்கம் வென்றுள்ள சீன வீரங்கனைக்கு எடுக்கப்படும் ஊக்கமருந்து பரிசோதனையின் முடிவில் தான் தெரியும்.

இந்தியாவின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார் லவ்லினா. மகளிருக்கான குத்துச் சண்டை போட்டியின் 69 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகள் இன்று நடைபெற்றது. அதில், ஜெர்மனியின் அபெட்ஸ் நடைனை எதிர்த்து விளையாடிய இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன், 3-2 என்ற புள்ளிக் கணக்கில் லவ்லினா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதியில் லவ்லினா வெற்றிபெற்றால், அவருக்கு பதக்கம் நிச்சயம் என்பதால் அனைத்து இந்தியர்களின் கண்களும் அவர் மீது குவிந்துள்ளது.

23 வயதான இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நாட்டிற்கு உற்சாகத்தை அளித்தார்.  அசாமில் இருந்து வந்த முதல் பெண் குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா.

செவ்வாயன்று கொக்குகிகன் அரங்கில் நடைபெற்ற போட்டியில் அனுபவம் வாய்ந்த ஜெர்மனி வீராங்கனை நாடின் அபெட்ஸை வென்று காலிறுதிக்கு முன்னேறினார் லவ்லினா.

ALSO READ | TNPL 2021: கோவை vs திண்டுக்கல்; 5 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் வெற்றி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News