புதுடெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக விளையாடிய இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின்போது, ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் கடுமையாக இருந்தது.  இங்கிலாந்தின் இன்னிங்ஸின் எட்டாவது ஓவரில், ஒரு சக்திவாய்ந்த ஷாட்டைத் தடுக்கும் வகையில் ஸ்ரேயாஸ் ஐயர், தான் நின்றிருந்த இடத்தில் இருந்து இடதுபுறத்தில் டைவ் செய்து குதித்தபோது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் எஞ்சியுள்ள இரண்டு இங்கிலாந்து ஒருநாள் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாட முடியாது என்று இன்று உறுதியானது. தோள்பட்டை விலகியிருப்பதால் அவருக்கு ஓய்வு அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 


Also Read | Ind vs Eng: முதல் ODI போட்டியை 66 ரன் வித்தியாசத்தில் வென்றது இந்தியா


டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ஸ்ரேயஸ் ஐயர், ஐ.பி.எல்லின் முதல் பாதியில் பங்கேற்க முடியாது என்றும் தெரியவந்துள்ளது. நேற்று காயம் ஏற்பட்ட உடனேயே ஸ்ரேயஸ் ஐயருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது பி.சி.சி.ஐ வெளியிட்ட ஐயரின் மருத்துவ அறிக்கையில், தோள்பட்டை ஓரளவு விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இங்கிலாந்து தொடரிலிருந்து ஐயர் விளையாடமாட்டார் என்று பி.சி.சி.ஐ இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், காயம் குணமடைய பல வாரங்கள் ஆகும் என்பது இயல்பாக புரிந்து கொள்ளப்படக் கூடியதே.  


ஸ்ரேயஸ் ஐயர் இல்லாமல் இந்திய அணி ஒருநாள் தொடரில் மீதமுள்ள இரண்டு போட்டிகளை எதிர்கொள்ளும். எனவே அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அல்லது சுப்மான் அணியில் சேர்க்கப்படலாம்.  


ஸ்ரேயஸ் ஐயரின் காயத்தின் வலியை அவர் மட்டுமல்ல, டெல்லி கேபிடல்ஸ் அணியும் உணரும். அணியின் கேப்டன் மட்டுமல்ல, தவிர்க்க முடியாத முக்கிய பேட்ஸ்மேன். ஐயர் திரும்பும் வரை துணை கேப்டனாக இருக்கும் ரிஷாப் பந்த் டெல்லி கேபிடல்ஸ் அணியை வழிநடத்துவார் என்று தெரிகிறது.


Also Read | முதல் ODI போட்டியில் வென்ற இந்தியாவின் பெருமைமிகு தருணங்கள்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR