உலக கோப்பை வெல்லும் அணிக்கு பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?
உலக கோப்பை தொடருக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது!
உலக கோப்பை தொடருக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது!
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆனது இங்கிலாந்தில் வரும் 30-ஆம் தேதி துவங்குகிறது. இதற்கான பரிசுத் தொகை விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அறிவித்துள்ளது.
ஐசிசியின் இந்த அறிவிப்பு படி தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ. 70.16 கோடியாகும். இத்தொடரில் 11 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 28 லட்சம் அளிக்கப்படும்.
லீக் சுற்றுடன் கிளம்ப உள்ள 6 அணிகளுக்கு தலா ரூ. 70 லட்சம் வழங்கப்படும்.
புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும். இதில் தோற்று வெளியேறும் இரண்டு அணிகளுக்கு தலா ரூ. 5.6 கோடியும், இறுதி போட்டியில் தோற்கும் அணிக்கு ரூ. 14 கோடியும் அளிக்கப்படும்.
சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் சேர்த்து ரூ. 28 கோடி அளிக்கப்படும். ஆக இத்தொடரின் பரிசுதொகை மொத்தமாக ரூ. 70.16 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உலக கோப்பை தொடரை பொறுத்தவரையில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளையும் எதிர்கொள்வதால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கோப்பையினை இந்தியா அல்லது இங்கிலாந்துதான் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக கோப்பை நடக்கும் இங்கிலாந்தில் ஆடுகளங்கள் அனைத்தும் பேட்டிங்கிற்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளதால் ஒரு இன்னிங்ஸில் 500 ரன்கள் அடிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உலக கோப்பை தொடருக்கான வர்ணனையாளர்கள் பெயரை அறிவித்துள்ளது ஐசிசி.
இந்த அறிவிப்பின் படி 24 வர்ணனையாளர்கள் வர்ணனை செய்ய உள்ளனர். இந்தியாவின் சார்பில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் மற்றும் கிரிக்கெட்டில் இந்தியாவின் வர்ணனை முகமாக இருக்கும் ஹர்ஷா போக்ளே ஆகிய மூவரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.