புதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனுக்கு முன்பு, மிகுதியான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த IPL ஏலம் முடிவடைந்து விட்டது. இந்த ஆண்டு IPL ஏலத்தில், தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் IPL வரலாற்றிலேயே அதிக அளவு தொகை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் ஆகி சரித்திரம் படைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Chris Morris-ஐ ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது. பலர் இதை சரியான முடிவாக கருதினாலும், சிலருக்கு மோரிசுக்கு இந்த தொகை செலவிடப்பட்டது சரியானதா என சந்தேகம் இருந்தது. ஆனால், அடுத்த நாளே க்ரிஸ் மோரிஸ் ராஜஸ்தான் தனக்காக செலவழித்த பணம் நியாயமானதே என்பதை நிரூபிக்கும் வகையில் அதிரடியாக ஆடினார்.  


மோரிசின் அபாரமான ஆல்ரவுண்ட் ஆட்டம்


க்ரிஸ் மோரிஸ் (Chris Morris) ஏலத்தின் மறுநாளே ஒரு டி 20 போட்டியில் அற்புதமான இன்னிங்ஸை விளையாடியுள்ளார். சிஎஸ்ஏ டி 20 சவாலில் (CSA T20 Challenga) டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய கிறிஸ் மோரிஸ் 10 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். பேட்டிங் செய்யும் போது, ​​மோரிஸ் 8 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 21 ரன்களை எடுத்தார். மோரிஸின் இந்த அற்புதமான ஆல்ரவுண்ட் ஆட்டத்தினால் டைட்டன்ஸ் அந்த போட்டியில் நைட்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.


ALSO READ: IPL சரித்திரத்திலேயே மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட Chris Morris சாதனை


IPL ஏலத்தில் சாதனை படைத்தார் க்ரிஸ் மோரிஸ்


IPL 2021 ஏலத்தில், இந்த ஆண்டு அணிகள் அதிகமாக பணத்தை செலவு செய்தனர். யாரும் அதிகமாக எதிர்பார்க்காத வீரர்களுக்கும் அணிகள் கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்தன. இதற்கிடையில், கிறிஸ் மோரிசை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதன் மூலம், கிறிஸ் மோரிஸ் IPL வரலாற்றில் மிக அதிக தொகையில் வாங்கப்பட்ட வீரரானார். மோரிஸுக்கு முன்பு, இந்த சாதனை யுவராஜ் சிங்கின் பெயரில் இருந்தது. அவர் 16 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்பட்டார்.


பல பெரிய நட்சத்திரங்களை எந்த அணியும் வாங்கவில்லை


IPL ஏலத்தில் (IPL Auction), பல அணிகள் பல வீரர்களுக்காக பெரும் தொகையை செலவிட்டன. ஆனால் சில பெரிய வீரர்களை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை. அலெக்ஸ் ஹேல்ஸ், ஆரோன் பிஞ்ச், ஜேசன் ராய் மற்றும் சாம் பில்லிங்ஸ் அவர்களில் சிலர். உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித்தையும் டெல்லி அணி வெறும் 2.2 கோடிக்கு வாங்கியது.


ALSO READ: IPL Auction 2021: அற்புதமான 3 தொடர்ச்சியான சிக்ஸர்கள், யார் அந்த வீரர்?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR