உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவன்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை PV சிந்து தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நிலையில், தற்போது மேலும் ஒரு இந்திய வீராங்கனை குறிப்பாக தமிழக வீராங்கனை தங்கம் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.


இன்று நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் என்பவர் தங்கம் வென்றுள்ளார். பிரேசில் நாட்டில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் எடுத்து இளவேனில் வளரிவான் சாதனை படைத்துள்ளார். 



ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர் தான் இந்த இளவேனில் வளரிவன் என்பது குறிப்பிடத்தக்கது. 20 வயதான இளவேனில் வளரிவான் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வெல்லும் மூன்றாவது வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் இந்தியாவின் அபூர்வி சாந்தலா, அஞ்சலி பகவத் ஆகியோர் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றுள்ளனர். கடலூரைச் சேர்ந்த இளவேனில் என்ற வீராங்கனைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.