Cricket News: கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றுநோயைத் தடுக்கும் நோக்கில் "உயிர்-பாதுகாப்பான நெறிமுறைகளை" மீறியதற்காக இங்கிலாந்தின் ஜோஃப்ரா ஆர்ச்சர் (Jofra Archer) மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் அவர் ஐந்து நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டார் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

COVID- இன் பரவலை எதிர்த்துப் போராடும் முயற்சியில், இரு அணிகளும் கடந்த வாரம் முதல் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று வருகின்றன.  


ஜூலை 8 முதல், ரோஸ் பவுல் (The Rose Bowl) ஸ்டேடியத்தில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஒருவருக்கொருவர் முதல் டெஸ்ட் போட்டியில் மோதினர். அதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


ALSO READ | #ENGvWI 1st Test: 143 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் பார்வையாளர்கள் இல்லாமல் நடக்கும் முதல் போட்டி


ALSO READ | ENG vs WI உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக All-Rounders பட்டியலில் இணைந்த பென் ஸ்டோக்ஸ்


இன்று முதல் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உயிர்-பாதுகாப்பான நெறிமுறைகள்" (Bio-Secure Protocols) விதிக்கப்பட்டு உள்ளது. அதாவது எந்த மைதானத்தில் வீரர்கள் விளையாடுவார்களோ, அதே மைதானத்தில் தான் தங்கி இருக்க வேண்டும். ஆனால் அந்த விதியை அவர் மீறியுள்ளார். இதன் காரணமாக அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 


இது 143 ஆண்டுகால டெஸ்ட் (Test Cricket) கிரிக்கெட்டில் வரலாற்றில் , இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் இந்த டெஸ்ட் தொடர புதிய தருணமாக உள்ளது. ஆம், உலக கிரிக்கெட் வரலாற்றில் பார்வையாளர்கள் இல்லாமல் வெற்று மைதானத்தில் கிரிக்கெட் விளையாடப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.