இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 15% ஊதியம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ICC சட்ட விதிகளின் நிலை 1 விதிகளை மீறியதாக இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றத்தினை நிறுபித்ததன் பேரில் ஆண்டர்சனின் போட்டி ஊதியத்தில் 15% -னை அபராதமாக செலுத்த வேண்டும் என ICC அறிவித்துள்ளது!



இந்தயா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடேயேனா 5-வது மற்றும் கடைசி ஒருநாள் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சை விளையாடுகையில் ஆட்டத்தின் 29-வது ஓவரில் ஆண்டர்சன் ICC சட்ட விதிகளை மீறி நடுவரிடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் LBW விக்கெட் தொடர்பாக விவாதத்தில் அவர் இவ்வாறு செய்ததாக கூறி அவரகுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இந்த குற்றச்சாட்டானது ஆட்ட நடுவர்கள் குமார் தர்மசேனா மற்றும் ஜோயல் வில்சன், மூன்றாவது நடுவர் புரூஸ் ஆக்ஸன்ஃபோர்டு, ஐ.சி.சி. எம்பயர்ஸ் எமிரேட்ஸ் எலைட் பேனலில் இருந்து நான்காவது நடுவர் டிம்பி ராபின்சன் ஆகியோரால் சமன் செய்யப்பட்டுள்ளது.


ICC சட்டவிதிகள் நிலை 1 மீறல்கள் படி, குற்றம்சாட்டப்பட்ட வீரருக்கு குறைந்தது கண்டனத்தையும், அதிகப்பட்சமாக 50% வரையிலான ஊதிய அபராதமும் விதிக்கப்படும். மேலும் 1 அல்லது 2 டீமெரிட் புள்ளிகள் ஆட்டகாரருக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது!