கெத்து காட்டிய இந்திய அணியை மூக்குடைத்த இங்கிலாந்து அணி
இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 378 இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்து வரலாறு படைத்தது இங்கிலாந்து அணி.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட எஞ்சிய ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. சிறப்பாக விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் டாப் ஸ்கோர் செய்தும், இரண்டாவது இன்னிங்ஸில் சொதப்பியது. இருப்பினும் இங்கிலாந்து அணிக்கு சவாலான ஸ்கோரையே வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
மேலும் படிக்க | ரிஷப் பந்த் சதம் அடிக்கவில்லை, அது பந்துவீச்சாளர்களின் தவறு - முகமது ஆசிப்
அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தாலும், ஜோரூட் மற்றும் ஜானி பேரிஸ்டோவ் இந்திய அணிக்கு சிம்ம சொப்பமான மாறினர். இவரது விக்கெட்டையும் வீழ்த்த முடியாமல் இந்திய அணி திணறியது. ஒரே ஒருமுறை ஜானி பேரிஸ்டோவ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஹனுமா விஹாரி நழுவ விட, அதன்பிறகு இருவரும் சுதாரித்துக் கொண்டு சிறப்பாக விளையாடினர்.
அவர்களின் ஆட்டத்தால் இந்திய அணியின் வெற்றிக் கனவு பறிபோனது. ஜோ ரூட் 142 ரன்களும், பேரிஸ்டோவ் 114 ரன்களும் எடுத்து இங்கிலாந்து அணியை வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்தப் போட்டிக்கு முன்பு வரை 350 ரன்களுக்கு மேல் இந்திய அணி நிர்ணயித்த ஸ்கோரை எந்த அணியும் சேஸ் செய்ததில்லை என்ற சாதனையுடன் இருந்தது.
அந்த சாதனையை தகர்த்துள்ள இங்கிலாந்து, இந்திய அணிக்கு எதிரான தொடரையும் சமன் செய்து அசத்தியது. இதன்மூலம் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளுடன் கோப்பையை பகிர்ந்து கொண்டன. கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் ஜோ ரூட், இந்த தொடரிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவர் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜானி பேரிஸ்டோவ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அணிக்கு எதிரான இந்த தொடரில் மட்டும் 5 போட்டிகளில் விளையாடிய ஜோ ரூட் 737 ரன்கள் குவித்தார்.
மேலும் படிக்க | பும்ரா வேகத்தில் நொறுங்கும் சாதனைகள்! 40 ஆண்டுகால சாதனை முறியடிப்பு
இதுமட்டுமில்லாமல் 2021 முதல் தற்போது வரை சிறப்பாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பேட்ஸ் மேன்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் ஜோ ரூட். அவர் 24 போட்டிகளில் விளையாடி 2595 ரன்கள் குவித்துள்ளார். இதில் 11 சதங்களும் அடங்கும். 11 போட்டிகளில் விளையாடி 779 ரன்களுடன் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாவது இடத்திலும், 15 போட்டிகளில் விளையாடி 756 ரன்களும் எடுத்திருக்கும் விராட் கோலி 3வது இடத்திலும் இருக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR