IndiaVsEng: இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்கு 257 ரன்கள்!
இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 257 ரன்களை நிர்ணயித்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி!
இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 257 ரன்களை நிர்ணயித்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இத்தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் இன்று ஹெட்டிங்கெலி மைதானத்தில் நடைப்பெற்று வருகின்றது.
இப்போட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்து விளாயாடியது. இதனையதுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வீரர்கள் தொடர்ந்து சொற்ப ரன்களில் வெளியேறி வந்தனர்.
அணித்தலைவர் கோலி 71(72), ஷிகர் தவான் 44(49) மற்றும் டோனி 42(66) ஆகிய வீரர்கள் சற்றே அணிக்கு பலம் சேர்த்தனர். எனினும் இதற வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பியதால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதனையடுத்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கவுள்ளது.
முன்னதாக கடந்த 12-ஆம் நடைப்பெற்ற முதல் ஒருநாள் போட்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதனையடுத்து ஜூலை 14-ஆம் நாள் இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் நடைப்பெற்றது. இப்போட்டியில் இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதனையடுத்து மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் வெற்றிப்பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.