இங்கிலாந்து vs இந்தியா, 4 வது டெஸ்ட்: இந்தியா மற்றும் இங்கிலாந்து (england vs india) அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டனில் இன்று (செப்டம்பர் 2) முதல் தொடங்க உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தயாராக உள்ளன. இன்றைய டெஸ்ட் போட்டியில் (4th Test) டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்து டாஸ் வென்றது: 
டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் (Joe Root) கூறுகையில், நாங்கள் முதலில் பந்து வீசப் போகிறோம். காலை நேரத்தில் ஆடுகளம் பந்துவீச்சு ஏற்றார் போல உள்ளது. எங்கள் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜோஸ் பட்லருக்கு (Jos Buttler) பதிலாக ஒல்லி போப் (Ollie Pope) மற்றும் சாம் குரானுக்கு (Sam Curran) பதிலாக கிறிஸ் வோக்ஸ் (Chris Woakes) களம் இறங்குவார்கள் எனக் கூறினார்.


 



தயாராக உள்ளோம்- விராட் கோலி:
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி (Virat Kohli) கூறுகையில், டாஸ் வெல்வது என்பது எங்கள் கையில் இல்லை. ஒருவேளை டாஸ் வென்று இருந்தால், நாங்கள் முதலில் பந்து வீசியிருப்போம். இருப்பினும், இரண்டிற்கும் தயாராக தான் ஒரு அணி இருக்க வேண்டும். முதலில் பேட்டிங் செய்வதால், அதிக ரன்களை எடுக்க முயற்சி செய்வோம். அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இஷாந்த் (Ishant Sharma) மற்றும் முகமது ஷமிக்கு (Mohammed Shami) ஒய்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு பதிலாக உமேஷ் யாதவ் மற்றும் ஷர்துல் தாக்கூர் (Shardul Thakur) அணிக்கு திரும்பி உள்ளனர் என்றார்.


ALSO READ| IND vs ENG 4th Test: இரு அணிகளிலும் பெரிய மாற்றம்; இந்த வீரர்களுக்கு வாய்ப்பு!


அணியை உற்சாகப்படுத்திய ரவி சாஸ்திரி:
அதற்கு முன் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி (Ravi Shastri) கூறுகையில், லார்ட்ஸ் மைதானத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், லீட்ஸ் பற்றி மறந்துவிடுங்கள் என்று கூறி அணிக்கு தன்னம்பிக்கையை கொடுத்தார். விளையாட்டில் வெற்றி, தோல்வி போன்ற விஷயங்கள் நடந்து கொண்டே இருக்கும். நல்ல தருணங்களை மட்டும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என அணியை உற்சாகப்படுத்தினார்.


1-1 என சமநிலை:
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில், டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற நான்காவது போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். இந்த போட்டியில் வெற்றியை பதிவு செய்து முன்னிலை பெற இரண்டு அணிகளும் தயாராக உள்ளது.


அஷ்வின் பெயர் இடம்பெறவில்லை:
ரவீந்திர ஜடேஜாவின் உடற்தகுதி குறித்து செய்திகள் வந்த நிலையில், அவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு (Ravichandran Ashwin) வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த போட்டியிலும் ஆடும் 11 வீரர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.


ALSO READ| ICC Test Rankings: ரூட் முதலிடத்தில்; விராட் கோலியை முந்தினார் ரோஹித்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR